24 special

உள்ளே கிடக்கட்டும் என திமுகவின் சீனியர் தலைகள் ஆப்பு வைத்தார்களா செந்தில் பாலாஜிக்கு?

mk stalin, senthilbalaji
mk stalin, senthilbalaji

சட்ட விரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு இதுவரை எட்டு முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கை எப்படியும் அவருக்கு ஜாமீன் கிடைக்க விடாமல் செய்துவிடும் என தகவல்கள் ஒரு புறம் சொல்லப்பட்டாலும் மறுபுறம் ஆளும் திமுக தரப்பிலிருந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக மறைமுக வேலைகள் பல நடக்கின்றன என அவ்வப்போது அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். 


குறிப்பாக செந்தில் பாலாஜியை கைது செய்யும் பொழுது இருந்த எதிர்ப்பு செந்தில் பாலாஜியை வெளியே எடுக்க வேண்டும் என திமுகவில் இல்லாமல் இருக்கிறது என சில தகவல்கள் அவ்வப்போது உலா வந்தன, கடந்த மாதம் கூட சிறையில் இருந்து மருத்துவமனை சிகிச்சைக்கு வந்த செந்தில் பாலாஜியை திமுகவின் முக்கியஸ்தர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை! இது மட்டுமல்லாமல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை சென்று பார்ப்பதற்கு திமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் தயாராக இல்லை என்ற தகவல்கள் கிடைத்த நிலையில் அடுத்தடுத்து செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது? 

குறிப்பாக கடந்த மாதம் செந்தில் பாலாஜிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, அந்த பிறந்த நாளில் செந்தில் பாலாஜியை வாழ்த்தி ஒருவர் கூட பிறந்த நாள் செய்தி சொல்லவில்லை, இது மட்டுமல்லாமல் கரூர் பகுதியில் மட்டும் ஆங்காங்கே சில பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன அதுவும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மட்டும் தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர், இன்னும் பலர் அசோக் தலைமறைவாக இருக்கிறார் அவர் வராமல் நாங்கள் எப்படி பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாட முடியும் என அமைதியாக இருந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கொடுத்த சமூக வலைதள பதிவு இன்னும் பல விஷயங்களுக்கு அடிநாதமாக அமைந்துள்ளது. அரசியலுக்கு விமர்சகர் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார், அதில் செந்தில் பாலாஜி மனமுடைந்து இருப்பதாக குறிப்பிட்டு ஒரு பத்திரிகையில் வெளிவந்த தகவலை சுட்டிக்காட்டி உள்ளார், அதில் கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது செந்தில் பாலாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்கள் இந்த பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் கூட வாழ்த்தவில்லை இதனால் செந்தில்பாலாஜிக்கு மன உளைச்சல் அதிகமான காரணமாகத்தான் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவரை சிறை அதிகாரிகள் கொண்டு வந்தனர் எனவும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டால் அவரை அடிக்கடி சந்திக்கலாம், அவருடைய மன இறுக்கத்தை குறைக்கலாம் என நாங்களும் நினைத்தோம் இதற்கான முயற்சிகள் அவருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரால் எடுக்கப்பட்டது ஆனால் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்திருக்க திமுகவின் மூத்த அமைச்சர்களுக்கு விருப்பமில்லை சில சீனியர் அமைச்சர்கள் விரும்பாததால் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார் செந்தில் பாலாஜி என்ற தகவலை பகிர்ந்துள்ளார். 

இது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் சில பேரிடம் கேட்டபோது செந்தில் பாலாஜி திமுகவில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருந்த சமயம் அவர்தான் பவர் சென்டர் ஆக இருந்தார், அதனால் சில சீனியர்களுக்கு அவர் மீது அப்பொழுதே பொறாமை ஏற்பட்டது. இதன் காரணமாக தற்பொழுது சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வரக்கூடாது என்பதற்காக பல வேலைகள் நடைபெற்று வருகின்றன அதில் ஒன்றுதான் இது என கிசுகிசுத்தனர், இப்படி செந்தில் பாலாஜி வெளியே வருவது திமுக சீனியர்களுக்கே பிடிக்கவில்லை என்ற விவகாரம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.