24 special

அமீருடன் 12 மணி நேர விசாரணை! அடுத்த சிக்கப் போகும் திமுக!

AMEER , SAVUKKU SHANKER
AMEER , SAVUKKU SHANKER

திமுகவின் முன்னாள் நிர்வாகியும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக இருந்து வந்த ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஒன்பதாம் தேதி கைது செய்தது. ஏனென்றால் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாடுகளுக்கு போதை பொருளை கடத்த முற்பட்ட ஒரு கும்பலை டெல்லி போலீசார் கைது செய்த பொழுது அவர்கள் இந்த போதை கடததல் கும்பலின் தலைவனாக ஜாபர் சாதிக்கை விசாரணையில் தெரிவித்துள்ளனர் இதனை அடுத்து ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற சம்மனை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கிற்கு அளித்த பொழுது அவர் தலைமறைவாகியிருந்தார் அதற்கு பிறகு ஜாபர் சாதிக்கு டெல்லி போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து பத்து நாட்கள் இதுவரை காவலில் எடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர் இந்த விசாரணையின் பொழுது அவர் தனது கூட்டாளியான சதானந்தத்தை குறித்தும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
                                                                                                       




இதனை அடுத்து போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சதானந்தத்தை கைது செய்து அவர்களின் போதை கடத்தல் குடோனாக செயல்பட்டு வந்த சில பகுதிகளையும் அதிகாரிகள் சோதனை இட்டு சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இதற்கிடையில் ஜாஃபர் சாதிக்கின் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பொழுது அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளில் ஜாபருடன் சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் நெருங்கி தொடர்பு வைத்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்து ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த சினிமா பிரபலம் மற்றும் அரசியல் பிரமுகர்களை விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டது.. முன்னதாக ஜாபர் சாதிக்கும் தயாரிப்பில் இயக்குனர் அமீர் படத்தை இயக்கி வந்ததால் சந்தேகம் முழுவதும் அவர் பக்கம் திரும்பியது அது மட்டும் இன்றி அமிர் ஜாபருடன் பட தயாரிப்பு மட்டுமின்றி சில தொழில்களை தொடங்கியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் அனைவரும் கேள்விகளை முன்வைக்க அமீர் இது குறித்து தன் மீது எந்த தவறும் இல்லை என்ற வகையில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

                                                                                                       

இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று என் சி பி அமிருக்கு சம்மன் அனுப்பி இருந்தது இதனை அடுத்து டெல்லியில் ஆர்.கே. புரம் 1வது செக்டரி உள்ள என் சி பி தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி நேரில் ஆஜராகி கிட்டத்தட்ட 12 மணி நேரம் அமீருடன் என்சிபி அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும் அமீருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டே அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த விசாரணையில் மொத்தம் மூன்று அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், சென்னையை சேர்ந்த செகண்ட் ஹாண்ட் லக்சுரி கார் விற்கும் நிறுவனம் ஒன்று இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளது, அந்த நிறுவனத்தை நடத்துபவருக்கும் ஜாபர் சாதித்திற்கும் பல வருட நெருங்கி தொடர்பு இருக்கிறது.

                                                                                                     

திமுக அமைச்சர்கள் பலர் பயன்படுத்தும் காரை ஜாபர் சாதிக் தான் வாங்கிக் கொடுத்துள்ளார் மேலும் அவர்கள் விற்க வேண்டும் என்று நினைக்கும் கார்களையும் ஜாபர் சாதிக் தான் இந்த கடையில் விற்றுள்ளார்! சிக்னல் சாட் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற சாதனங்களில் அனுப்பியுள்ள மெசேஜ் களையும் காண்பித்து அமிரிடம் விசாரணையை என்சிபி அதிகாரிகள் கேட்டுள்ளனர், பருத்திவீரன் படத்திற்கு பிறகு எடுத்த அனைத்து படத்திற்கும் யார் பினான்ஸ் செய்தார் என்ற கேள்விகளையும் என்சிபி அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதோடு போதைப்பொருளை தயாரிப்பதே தமிழகத்தில் தான் ஜாபர் தயாரித்து உள்ளார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிரச்சாரத்திற்காக திமுக செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் வலுவெடுத்து வருகிற நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் திமுக அமைச்சர்களுக்கும் ஜாபர் சாதிக் இருக்கும் மற்றொரு தொடர்பையும் அம்பலப்படுத்தி இருப்பது அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது.