Cinema

வெளியான அஜித்தின் கூஸ் பம்ஸ் காட்சிகள்!

ACOR AJITH
ACOR AJITH

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராகவே வலம் வந்து கொண்டு உள்ளார். இன்று தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் என்றாலே ஒரு தனி பெருமையும், புகழும் இருப்பதற்கு இவருடைய கடின உழைப்பு ஒன்றே காரணமாக இருக்கும். இதுவரை 61 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் அஜித்குமார். இதுவரை திரைப்பட விருதுகள் போன்ற பல விருதுகளை வாங்கியுள்ளார். ஆனால் சிறிது காலமாகவே இது போன்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் வருகிறார் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மேலும் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அஜித் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பந்தய வீரரும், ரேஸ் கார் ஓட்டுனராகவும் இருந்து வருகிறார். ஃபார்முலா சாம்பியன்ஷிப்பிலும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் இந்தியர்களில் இவரும் ஒருவராக உள்ளார். இவர் நடிப்பில் எந்த அளவிற்கு முன்னணியில் உள்ளாரோ அதே போல தான் ரேசர் ஆகவும் சூப்பராக வலம் வந்து கொண்டுள்ளார். 


இவர் நடிக்கும் திரைப்படங்களில் எந்த ஒரு டுப்பும் இல்லாமல் எல்லா காட்சிகளிலும் இவரே உண்மையாக நடிப்பார் என்பது நாம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்தது தான். வீரம் திரைப்படத்தில் கூட ட்ரெயினில் இருந்து தொங்கிக் கொண்டே சண்டை போடுவது போன்ற ஒரு காட்சி அமைந்திருந்தது. அதற்கு கூட டூப் அமைக்கலாம் என்று கூறி படக்குழுவினர் சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவித்து அவரே ரியலாக அந்த ரயிலில் இருந்து தொங்கிக்கொண்டு சண்டை போடும் காட்சியை நடித்து முடித்தார். அதனாலேயே இவருக்கு ரசிகர் கூட்டம் எப்போதும் அதிக அளவில் இருந்து வருகிறது. நடிப்பில் கூட எந்த ஒரு போலியும் இல்லாமல் நடிக்க வேண்டும் என்று நினைக்கும் இவருக்கு சமீப காலமாகவே நிறைய உடல்நிலை பிரச்சனைகள் ஏற்பட்டு அதற்கு பல அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தார். மேலும் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு பைக் பயணமும் மேற்கொண்டு வந்தார் இதனை அனைத்தையும் நாம் சமீபத்தில் இணையத்தில் பார்த்திருப்போம். இவர் தற்போது விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

எனவே இவரின் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் விடாமுயற்சியின் அப்டேட்டுகளை கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் விடாமுயற்சியின் படப்பிடிப்பில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது!! இதை விடாமுயற்சியின் அப்டேட் ஆகத்தான் இருக்கும் என்று ஆர்வமுடன் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தற்போது மிகவும் அப்செட் ஆக ஆகியுள்ளனர்!! விடாமுயற்சி படப்பிடிப்பின் போது பிக் பாஸ் ஆரவ் மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் காரில் செல்லும் காட்சி எடுக்கப்படும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அஜித் குமார் கார் ஓட்டியபோது சாலையைத் தாண்டி கார் சென்று விபத்து ஏற்பட்டது ஆனால் இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகிறது. இது குறித்து ஆரவ் இருவரும் நூலிழையில் உயிர் தப்பினோம் என்று வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!! மேலும் இதுகுறித்து சினிமா விமர்சகர்கள் வேறுமாதிரி கூறுகின்றனர்... என்னவென்றால், படம் வருவதற்கு இன்னும் அதிகமாக நேரம் எடுக்கலாம்... அதன் காரணமாக இது போன்ற காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது எனவும் வேறு கூறுகின்றனர்...