24 special

தென்காசியில் களம் மாறியது... முன்னேறும் தாமரை..!

Krishanasami, Johnpandiyan
Krishanasami, Johnpandiyan

நாடளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் ஓபிஎஸ், டிடிவி மற்றும் சில கட்சிகள் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்தார் பாஜக போட்ட சில கண்டிஷனால் வெளியேறினார். தற்போது அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அவருக்கு அவரது சமூக மக்களே திசை திரும்பியுள்ளனர்.


                                                                              

தென்காசி தொகுதியில் யார் வேட்பாளர் என்பது பாஜக கூட்டணியில் இழுபறியாக இருந்தது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் அவரும் இருந்தார். பாஜக கட்சியின் நிர்வாகி ஆனந்தன் அய்யாசாமி மூன்று பேரில் யாருக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், போட்டியிட்டால் தாமரை சின்னம் என பாஜக கூறியதால் கூட்டணியில் இருந்து வெளியேறினார் கிருஷ்ணசாமி. அதனால் ஜான் பாண்டியனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது அவர் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்.


                                                                            

இந்நிலையில், கிருஷ்ணசாமி தனித்து நின்றாலும் தனது தேவேந்திர குல வேளாளர் சமூகம் மக்கள் ஒட்டு வரும் என நினைத்த நிலையில் தற்போது கிருஷ்ணசாமிக்கு அது சிக்கலாக அமைந்துள்ளது. பாஜக கூட்டணியில் வெளியேறிய அவர் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் தேவேந்திர குல சமூக மக்கள் கிருஷ்ணசாமிக்கு எதிராக இறங்கியுள்ளனர். காரணம், அதிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால். 

                                                                            

பாஜக அரசு தேவேந்திர குல சமூகத்தினருக்கு 2021ம் ஆண்டு பிரதாமற் மோடி ஒரு மகிழ்ச்சியான செய்து கூறினார். அதாவது, தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் என அரசியல் சாசன திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேவேந்திர குலவேளாளர் கோரிக்கைக்கு நீண்டகாலம் தமிழக அரசு ஆதரவு கொடுத்து வருகிறது. தேவேந்திரகுல வேளாளர்களின் கண்ணியத்தை காலனிய அரசு பறித்தது.

                                                         

டெல்லியில் தேவேந்திரகுல வேளாளர்களுடன் சந்திப்பு நடத்தினேன். அப்போது தேவேந்திர என்பதும் நரேந்திர என்கிற என் பெயரும் ஒன்றாக இருக்கிறது என்றேன். தேவேந்திர குல வேளாளர் என்பது பெயர் மாற்றம் அல்ல- நீதியானது. தேவேந்திர குல வேளாளர்கள் நாகரிகம் சார்ந்தது என்று பிரதமர் மோடி அந்த சமூகத்தினருக்கு நல்ல செய்தியை கூறினார். அதனால் அந்த சமூகத்தினர் பாஜகவுக்கு வாக்களிக்க முடிவெடுத்தனர். மேலும் தற்போது நடக்கக்கூடியது மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் தீர்மானிப்பது இதனை மையப்படுத்தி தேவேந்திரகுல மக்கள் வேட்பாளர் ஜான் பாண்டியனை வெற்றி பெற முடிவெடுத்துள்ளனர். 

                                                                   


இதனால் ஜான் பாண்டியனின் வெற்றி என்பது தென்காசியில் பிரகாசமகா அமமைந்துள்ளது. இப்போது களம் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் vs பாஜக விபேட்பார் ஜான் பாண்டியன் இடையே தான் போட்டியானது தொடங்கியுள்ளது. இதனால் அதிமுக சார்பாக போட்டியிடும் கிருஷ்ணசாமி தரபு இது பின்னடைவை கொடுத்துள்ளது. தென்காசி கள நிலவரமானது இரட்டை இலையை காட்டிலும் தாமரை முன்னேறி செல்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.