24 special

13000 ஹெக்டேர் நிலம்..! 80 வழக்குகள்..! அடேங்கப்பா அசாம் கான் !

yogi
yogi

உத்திரபிரதேசம் : யோகி ஆதித்யநாத் தலைமையிலான உதிர்ப்பிரதேச மாநில அரசு சட்டத்துக்கு புறம்பாக புறம்போக்கு மற்றும் ஏழைமக்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எதிர்கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்பிக்கள் அமைச்சர்கள் என பலர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அமரவைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் சமாஜ்வாடி முக்கிய தலைவரான ஆஸம் கான் மீது 13,842 ஹெக்டேர் நிலா அபகரிப்பு வழக்கு ஆயிரம்கோடிக்கு மேல் பொதுப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தியது பொதுமக்களின் சொத்தை அபகரித்தது மேலும் முகம்மது அலி ஜவஹர் பலக்லைக்கழகத்திற்காக சிலரின் சொத்துக்களை அபகரித்தது உட்பட 89 வழக்குகள் போலீசாரால் பதியப்பட்டுள்ளன.

வழக்குகளை தொடர்ந்து முன்னாள் சமாஜ்வாடி தலைவர் ஸ்ரீராம்பூர் நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் தற்போது சீதாப்பூர் சிறையில் ஆஸம் கான் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தரப்பில் ஜாமீன் கேட்டு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்றம் விசாரணையை தாமதப்படுத்துவதாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் நீதிபதி பி.ஆர்.கவை மற்றும் போபண்ணா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் " இன்னுமா அவரை ஜாமீனில் விடவில்லை.இரண்டுவருடமாக சிறையில் உள்ளார். 

அவர் மீது இரண்டு வழக்குகள் என்றால் பரவாயில்லை. 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீன் கிடைத்தால் அவர் மீண்டும் ஒரு வழக்கில் சிறை செல்லப்போகிறார். அதனால் ஜாமீன் குறித்த உங்கள் பதில்மனுவை வருகிற செவ்வாய்கிழமைக்குள் தாக்கல் செய்யுங்கள்" என உத்திரபிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கனவே முதல்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஓரிரு வழக்குகளை தவிர்த்து அனைத்து வழக்கிலும் ஆஸம் கான் ஜாமினில் இருக்கிறார். இது நீதியின் கேலிக்கூத்து" என கூறியிருந்தது. ஆனால் தற்போது ஜாமீன் விசாரணையை தாமதப்படுத்துவதாக மாநில அரசை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.