
எழுத்தாளர் மாரிதாஸ் நேற்றைய தினம் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்ட தகவல்கள் பல்வேறு ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை சந்தித்து வரும் சூழலில் மாரிதாஸ் விமர்சனம் குறித்து கடந்த கால சம்பவங்களை சுட்டி காட்டி கருத்து தெரிவித்துள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன், இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-
மறுபடியும் ஏதோ கிளறிவிட்டிருக்கின்றார் மாரிதாசர் அவர் ஒருவிஷயத்தை உணர மறுக்கின்றார் அல்லது பிடிவாதம் பிடிக்கின்றார், கொள்கை அளவில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிடிப்பு இருக்கலாம் ஆனால் அரசியல் என்பது சில இடங்களில் சமரசம் செய்யவேண்டிய விஷயம்
உதாரணத்துக்கு காந்தியினை பாஜகவினருக்கு பிடிக்காதுதான் ஆனால் அரசியலில் காந்தி சமாதிக்கோ காந்தி நினைவுநாளுக்கோ மோடி போகாமல் இருக்கமுடியாது அவரை பற்றி பேசாமல் இருக்க முடியாது அதுதான் அரசியல், அண்ணாமலை ராம்சாமியினை பெரியார் என சொன்னால் அது கட்சி நிலைப்பாடு அதுதான் அரசியல்.
மாரிதாஸரின் புரட்சி வெறி எல்லாம் அவ்வளவு சரியானதாக இருக்கமுடியாது, 1980களில் அசாமில் 28 வயது மொகந்தா குபீரென புரட்சியாளராகி முதல்வராகி அசத்தினார் மக்கள் ஆதரவு அன்று அப்படி இருந்தது பின் என்னாயிற்று? இன்று மொகந்தா யாருக்காவது தெரியுமா?
இப்படி மக்களை திரட்டுகின்றேன் புரட்சி செய்கின்றேன் என்பதெல்லாம் நீண்டகாலம் பலனளிக்காது நின்று நிலைக்காது, மக்களை வாக்களிக்க திரட்டுவதை விட சிந்திக்க வைக்க வேண்டும் தன்னை உணரவைக்க வேண்டும், ஒரு நல்ல தலைவன் அதற்கு வழிகாட்ட வேண்டும்.
அரசியலின் இன்னொரு பக்கத்தை ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளை பொதுஇடத்தில் பிளந்து காட்ட வேண்டும், ஒவ்வொரு மக்களையும் சிந்திக்க வைக்க வேண்டும், அண்ணாமலை அதைத்தான் செய்கின்றார், மாரிதாஸர் மறுபடி மறுபடி அண்ணாமலையினை தாக்குவதும் சரியல்ல, சமூக ஊடகங்களால் சல்லிக்கு பிரயோசனமில்லை என மாரிதாஸர் கருதுவாரானால் அவருக்கு ஏன் யு டியூபும் இணையதளமும்?
அவருக்கு தலைவர் மோடி என்றால் ஏன் யுடியூபிலே சுற்றிகொண்டிருக்க வேண்டும்?, களமிறங்கி ஒரு தொகுதியிலாவது பாஜக எனும் கட்சியினை மோடிக்காக வளர்க்கலாம் அல்லவா? அதை செய்யலாம் அல்லவா?
அவர் செய்யமாட்டார் செய்யும் திட்டமும் இல்லை, அவர் ஒரு விபரீத பெரும் கனவில் இருப்பது தெரிகின்றது ஆளாளுக்கு கனவு கண்டு கட்சிக்குள் வந்தால் கட்சிக்கு ஏன் தலமை அதுவும் டெல்லியில் ஒரு தலமை என்பதுதான் தெரியவில்லை, சிலவருடம் வீடியோ வெளியிடுவதுதான் பாஜகவில் பதவி வாங்க தகுதி என்றால் எதிர்காலத்தில் அது மிகபெரிய குழப்பமாக முடியும், ஆளாளுக்கு வீடியோ என்ன? வெப் சீரியலே தயாரித்துவிட்டு கமலாயலம் வாசலில் வந்து நிற்பார்கள்.
இதெல்லாம் சரியான விஷயம் அல்லமாரிதாஸ் மோடியினை ஏற்றுகொண்டார் என்றால் நல்லது, அவர் ஒரு குழப்பத்தில் இருப்பது தெரிகின்றது, அவர் யூடியூப் பத்திரிகையாளரா இல்லை அரசியல்வாதியா என்பது அவருக்கே தெரியவில்லை.
அவர் அரசியல்வாதி என்றால் தலமைக்கு கட்டுபட்டு கட்சியில் இணையட்டும், அவர் யு டூயுப் பத்திரிகையாளர் என்றால் அதை நடத்தட்டும், ஒரு பத்திரிகை வைத்து கொண்டு கட்சியினை கைபற்றும் "முரசொலி" காலமெல்லாம் என்றோ முடிந்துவிட்டது, கருணாநிதியின் அந்த ஜெகஜாலத்தை மாரிதாஸால் செய்யமுடியாது அதுவும் பாஜகவில் முடியாது
இங்கு ஆனானபட்ட ஜெயகாந்தன் கண்ணாதாசன் சிவாஜிகணேசன் சோ ராமசாமியெல்லாம் பெரும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக கருதி தலைகீழான காட்சிகள் உண்டு, மாரிதாஸர் அதை கவனத்தில் கொள்வது நல்லது, 1984ல் கட்சி தொடங்கி இன்று அசைக்கமுடியா நிலையில் இருக்கும் பாஜகவினருக்கு தமிழகம் பற்றி நிச்சயம் சில திட்டம் இருக்கும், அவர்களுக்கு சில வீடியோக்களை வெளியிட்ட தான் வழிகாட்ட போவதாக மாரிதாசர் சொன்னால் அது அமெரிக்காவுக்கு இலங்கை அரசு ஆயுதம் கொடுப்பதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளார்.