24 special

பிரேசிலின் எம்ப்ரேயர் டர்போபிராப் விமானம் இந்தியாவில் அறிமுகம்..!

aircraft
aircraft

இந்தியா : பிரேசிலின் எம்பரர் EMBR3 SA 2023 ல் தனது டர்போபிராப்ரக விமானங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மத்திய அரசுடன் பேச்சுவார்த்தயை தொடங்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக அந்த விமானதயாரிப்பு இந்நிறுவனத்தின் வணிகத்தலைவர் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய எம்ப்ரேயர் கமர்சியல் ஏவியேஷன் தலைமை அதிகாரி அர்ஜன் மெய்ஜர் "பிராங்கோ -இத்தாலியன் ATR AIR PA வர்த்தக ஆசிய சந்தையில் ஆதிக்கம் செலுத்த அதன் எஞ்சின் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் இதை செயல்படுத்துகிறோம். இது நாம் எடுக்கவேண்டிய ஒரு பெரிய முடிவு.

இந்த வகை விமானங்கள் 2027 அல்லது 2028ல் இந்திய வர்த்தக சந்தையில் நுழையும் என கணிக்கிறோம். இந்த ரக விமானம் வர்த்தக உலகில் புது புரட்சியை ஏற்படுத்தும். எம்ப்ரேயர் எஞ்சின் தயாரிப்பாளர்களுக்கு முன்மொழிவுக்கான கோரிக்கைகளை வெளியிட்டுள்ளோம். இந்த வருட இறுதிக்குள் முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இப்போது சரக்கு வர்த்தகம் என்பது மிகப்பெரிய விஷயம். நாம் இப்போது வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்கிறோம். நமது வீடு வாசலுக்கு நமது ஆர்டர்கள் தேடிவருகின்றன. உலகம் முழுவதும் ஏற்பட்ட தொற்றுநோய் இந்த நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. பெரும்பாலான உற்பத்தியாளர்களை போலவே எம்ப்ரேயரும் சிக்கல்களை சந்தித்து  வருகிறது.

இந்த விமானத்தின் மூலம் விநியோக சங்கிலிகள் சுரக்கப்படும்.விரைவான சேவையை பெற முடியும்" என கூறினார். மேலும் இந்தியாவில் மேக் இந்த இந்தியா திட்டத்தின் கீழ் எஞ்சின் தயாரிப்புகள் இருக்கவேண்டும் என மத்திய அரசு நினைப்பதால் 30 சதவிகித தயாரிப்புகள் இந்தியாவிலேயே நடைபெறவேண்டும் என மத்திய விமானத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எம்ப்ரேயர் தனது கிளைநிறுவனத்தை இந்தியாவில் ஆரம்பிக்கும் பட்சத்தில் ஆசியாவில் வர்த்தக போக்குவரத்தில் இந்தியா மேலும் ஒரு மைல்கல்லை தொடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் வேலைவாய்ப்புகள் பெருக இதுவும் ஒரு காரணியாக இருக்கும் என நம்பப்படுகிறது.