24 special

16 நாள் ரெய்டு…! அம்பலமான ஆயிரக்கணக்கான கோடி விவகாரம்…!

jagathrakshakan
jagathrakshakan

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் திமுகவின் முக்கிய தலைவராக வலம் வருபவர். திமுகவில் உள்ள முதல் 10 தலைவர்களை தற்போது பட்டியலிட்டால் அதில் ஜெகத்ரட்சகன் ஒருவராக இருப்பார், இது மட்டுமல்லாமல் திமுகவில் இருக்கக்கூடிய முதல் 10 பெரும் பணக்காரர்களை பட்டியலிட்டால் கண்டிப்பாக அதில் ஜெகத்ரட்சகன் முதல் மூன்று இடங்களில் இருப்பார். 


அந்த அளவிற்கு ஜெகத்ரட்சகன் பொருளாதார ரீதியாக பெரும் பலம் படைத்தவர் இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி ஜெகத்ரட்சகன் வீடு அலுவலகம் அவருக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகள் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடி சோதனைகள் நடத்தினர், தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடந்து வந்தது. 

100 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது இந்த சோதனையின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது மற்றும் கணக்கில் வராத தங்கம், கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சிகள், பல கோடி மதிப்பிலான வாட்ச்கள் மற்றும் இந்திய ரூபாயில் திரும்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் ஆகியவை பல கோடிகளில் வெளிவந்ததாக அப்பொழுதே செய்திகளில் தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை குறித்து வருமானவரித்துறையினர் முக்கிய தகவல்களை அறிக்கையாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் தமிழக மற்றும் புதுச்சேரியில் 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது, கல்வி நிறுவனங்களில் இருந்து வரி ஏய்ப்பு  செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. 

இதனைத்தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கல்லூரிகளில் இருந்து 400 கோடி மதிப்பில் கணக்கில் காட்டாத கட்டண ரசீதுகள், தவறான தகவல்கள் அளித்து 25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கியதற்கான ஆதாரங்கள், மேலும் கல்வி பயில மாணவர்களை அழைத்து வந்ததற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட ஏஜென்ட் கமிஷன்கள், மதுபான வணிகத்தில் போலி வரவு செலவு காண்பிக்கப்பட்டவைகள் என 500 கோடி மூலம் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதும், கணக்கில் வராத 300 கோடி அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து பெற வங்கி கணக்கிற்கு எதுவுமே முறையான ஆவணங்கள் இன்றி மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல் 32 கோடி ரூபாய் கட்டு கட்டாக பணமும் 28 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு திமுகவின் எம்பி ஜெகத்ரட்சகன் மீது நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் ரெய்டில் பணம் கணக்கில் வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமானவரித்துறை தரப்பில்  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 67 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது, 3000 பக்க குற்றப்பத்திரிக்கை என நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் ஆயிரம் கோடி ரூபாய் விவகாரத்தில் திமுகவில் எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு என்ன ஆகுமோ என திமுக தரப்பினர் கவலையிலிருந்து வருகின்றனர். 

மேலும் வருமானவரித்துறை தரப்பில் அறிக்கை 18ம் தேதி இரவு வெளியிடப்பட்டது, இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக வருமானவரித்துறைக்கு கைது செய்யும் அதிகாரங்கள் கிடையாது ஆனால் இதனை வைத்துக்கொண்டு அமலாக்கத்துறை உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 1000 கோடி அளவிற்கு தென்னிந்தியாவில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்த ரெய்டில்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.