24 special

ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கப்போகும் எடப்பாடி...!

edapadi
edapadi

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் என்ற ஏற்பாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். 


அந்த வகையில் மதுரையில்  நடைபயணம் நடைபெற்ற போது அண்ணாமலை பேசுகையில் அண்ணாதுரை மற்றும் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் குறித்து பேசியதால் எதிர் கட்சிகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பத்து நாட்கள் தமிழ் மாநாடு நடைபெற்றதாகவும் அப்போது ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தலைவர்கள் மேடையில் ஏறி பேசும்போது நான்காவது நாள் பிடி ராஜனோடு அண்ணாதுரை மேடையில் ஏறி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் அந்த மாநாட்டில் மணிமேகலை என்ற குழந்தை தமிழ் பாடல் ஒன்றை பாடியதை அண்ணாதுரை மேடையில் பேசுகையில்  சுட்டிக்காட்டி அந்த குழந்தை அருமையாக அந்த பாடலை பாடியது என்று கூறியதோடு இதுவே கற்காலமாக இருந்தால் உமையாளின் பாலை குடித்துதான் இந்த மணிமேகலை இப்படி பாடினாள் என்று கட்டுக் கதையை கட்டி இருப்பார்கள் என்று அண்ணாதுரை பேசியதாக அண்ணாமலை கூறினார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆறாவது நாள் மேடைப்பேச்சில் கலந்து கொள்ள வேண்டிய முத்துராமலிங்க தேவர் ஐந்தாவது நாளே மேடையில் ஏறி உமையவளை பற்றி யார் தவறாக பேசியது என்று கோபத்துடன் கேட்டாராம் அதன் பின் இனிமேல் யாராவது உமையாளை பற்றி அவதூறாக பேசினால் பால் அபிஷேகம் நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு ரத்த அபிஷேகம் தான் நடைபெறும் என்று கூறியதுடன் அண்ணாதுரை ஓடி வந்து மன்னிப்பு கேட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டு பேசியது பேசு பொருளாக மாறியது.

இவ்வாறு மதுரையில் நடைபெற்ற பாதயாத்திரையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணாதுரை மற்றும் முத்துராமலிங்க தேவர் ஆகிய இருவரை பற்றி பேசியதை  எதிர்க்கட்சியான திமுக விமர்சித்தது அண்ணாதுரை பற்றி எப்படி பேசலாம் என்று பல கேள்விகளை எழுப்பி விமர்சனங்களை முன் வைத்தனர் இது மட்டுமல்லாமல் அதிமுகவில் இருக்கும் செல்லு ராஜு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட அண்ணாதுரையை பற்றி பேசக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும் வந்தனர்.

மேலும் முத்துராமலிங்க தேவர் பற்றி பேசியதற்கு தென் மாவட்டங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு குவிந்து வருவதுடன் அதைப்பற்றி வாய் திறக்காமல் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மீது அனைவரும் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் இதனால்  முக்குலத்தோர் சமுதாயத்தை சமாதானப்படுத்துவதற்கு தேவர் ஜெயந்தி குருபூஜை நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

அதாவது வருடம் தோறும் அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெறும் அந்த பூஜையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்துவது வழக்கம் அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க  தேவரை வழிபட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

அதாவது கமுதி அதிமுக கிளை செயலாளர் ஆறுமுகம் என்பவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர் பசும்பொன்  சென்று முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள முடிவெடுத்தது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது இருந்த அதிருப்தி குறையும் என்று எண்ணி எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு திட்டமிட்டுள்ளார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே எடப்பாடி மீது முக்குலத்தோர் சமுதாயம் ஏக கடுப்பில் இருந்து வரும் நிலையில்  எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் செல்லும் விவகாரம் தென் மாவட்டங்களில் எது போன்று எதிர்வினையை நிகழ்த்துமோ என எடப்பாடி தரப்பு சற்று பயத்தில் இருந்து வருவதாகவும் அதிமுக தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.