24 special

அப்பாவி 20 குழந்தைகள் மர*ம் ..மாசு அமைச்சர் பதவி பறிப்பா? களத்தில் இறங்கிய சிறப்பு குழு

MKSTALIN,MASUBRAMANIAN
MKSTALIN,MASUBRAMANIAN

தமிழகத்தை  சேர்ந்த நிறுவனம் தயாரித்த இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும்  சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்தில்  மருந்து கட்டுப்பாடு துறை ஆய்வு நடத்தியதில் . அதில் 350க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகத் தமிழ்நாடு ரிப்போர்ட் சமர்ப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகம் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.. இந்த விதிமீறல்கள் மிகக் கடுமையானதாகவும் முக்கியமானதாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நிறுவனத்தில் அடிப்படை வசதிகள் இல்லை, தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர்கள் இல்லை.. மேலும், அந்த நிறுவனத்தில் சரியான பாதுகாப்பு நடைமுறைகளும் இல்லை எனவும் அவர்கள் தற்போது தான் கண்டறிந்துளார்கள். 


காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள அதன் உற்பத்தி ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையில் இருந்து எடுக்கப்பட்ட இருமல் மருந்து மாதிரிகள் "கலப்படம்" செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், மருந்து உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது. அந்த மருந்துகளை மார்கெட்டில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இது தொடர்பாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் சில பரபர கருத்துகளைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளைச் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கே இருப்பதாகக் குறிப்பிட்ட நரேந்திர சிவாஜி, மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழக்கத் தமிழக அரசே காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அலட்சியத்தைக் காட்டியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும் பேசுகையில், "மருந்து தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டதால், அதற்கு உரிமம் வழங்குவதும், மருந்தைச் சரிபார்ப்பதும் அந்த மாநிலத்தின் பொறுப்பு.. உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பேட்ச் மருந்துக்கும் பகுப்பாய்வுச் சான்றிதழ் (COA) வழங்கப்பட வேண்டும். இதில் தமிழ்நாடு அரசு எங்கே தவறு செய்தது? உரிய பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதா இல்லையா? எந்த அதிகாரி தவறு செய்தார் என்பது விசாரிக்க வேண்டும். குறைபாடு கொண்ட மருந்து தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. இது அவர்களின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியமே இங்குக் குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம்.. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதி வருகிறோம். என்றார் 

இந்த  சூழலில், தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஸ்ரேசன் மருந்து நிறுவன உரிமையாளரான ரங்கநாதன் கோவிந்தன் சென்னையில் வைத்து  கைது செய்யப்பட்டார்.சிறப்பு விசாரணை குழு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. மருந்து நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என பராசிய துணை மண்டல போலீஸ் அதிகாரி ஜிதேந்திரா சிங் ஜாட் கூறியுள்ளார். அவரை சென்னையில் இருந்து நாளை பராசியா நகருக்கு அதிகாரிகள் கொண்டு செல்வார்கள். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, மருந்து கட்டுப்பாட்டு துறை மூத்த மருந்து தர கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்களான கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த துறை அமைச்சர் இன்பநிதி வெளியிட்ட  இட்லி கடை படத்திற்கு  ஆட்களை சேர்த்து கொண்டிருக்கிறார். மேலும் சிறப்பு விசாரணை குழு  அமைச்சரிடம்  விசாரிக்கலாம் என்ற செய்திகள் வெளிவருகிறது.இதில் பல தலைகள் உருள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.