
சற்றுமுன் இந்திய ரிசர்வ் வங்கி நாடுமுழுவதும் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30 -ம் தேதிக்குள் மாற்ற உத்தரவு போட்டு இருக்கிறது.அக்டோபர் 1-ம் தேதி முதல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.
இது நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் ஏன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் தடை செய்ய பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒருவர் ஒருமுறை 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டுமே மாற்ற முடியும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது, கடந்த 2019-ம் ஆண்டு முதலே இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ATM உள்ளிட்ட இயந்திரங்களில் அதிகபட்ச மதிப்பாக 500 ரூபாய் மட்டுமே பயன்படுத்த பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய உளவு துறை மற்றும் நிதி ஆலோசகர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் 49 % இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாகவும், மீதம் பணம் கணக்கில் வரவு இருப்பது குறித்து முழுமையான தகவல் இல்லை என கூறப்பட்டு இருக்கிறதாம், பெரும்பாலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்கப்பட்டு இருக்கலாம் .
பல்வேறு வழிகளில் தேர்தல்களில் வாக்குகளை பெற பெரும் அளவில் பயன்படுத்த படுகிறது என உளவுத்துறை மற்றும் மத்திய அரசிற்கு நிதி ரீதியிலான ஆலோசனை வழங்கும் ஆலோசகர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டே பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசு எடுத்து வந்ததாம்.
7 கட்டங்களாக நடைபெற்ற பல்வேறு வழிமுறைகளுக்கு பின்னர் இன்றைய தினம் ரிசர்வ் வங்கி இறுதியான முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் சாமானிய மக்ககளை தவிர 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பத்துக்கிய பலருக்கும் இந்த அறிவிப்பு ஆப்பாக அமைந்து இருக்கிறதாம் நாளை முதல் இதன் சம்பவம் நேரடியாக தெரியவரும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.