24 special

தொடர்ந்து ஊழலில் சிக்கும் செந்தில் பாலாஜி ...! அடுத்தடுத்து நடக்க போவது என்ன

Senthil balaji , annamalai
Senthil balaji , annamalai

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்ற ஏதாவது ஒரு அமைச்சர்கள் வாரம் ஒருவர் வீதம் சர்ச்சையில் சிக்கி விடுகிறார்கள் கடந்த வாரம் வரை PTR AUDIO சர்ச்சை பெரிய அளவில் வெடித்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தொடர்ந்து பாஜக கையில் எடுத்து இருக்கும் இரண்டு அம்ச பட்டியல் ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.


செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை ஊழல் வழக்கை விசாரணை செய்து இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட நிலையில் உடனடியாக செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் விசாரணை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

இந்த நிலையில் பிரதான எதிர் கட்சியான அதிமுக செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றசாட்டு வழக்கில் அடக்கி வாசிக்க தொடங்கி இருக்கிறது செந்தில் பாலாஜியை விமர்சனம்  செய்தால் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் என பெயர் வரலாம் என்பதால் அடக்கி வாசிக்க தொடங்கி இருக்கிறது அதிமுக.

ஆனால் பாஜக இந்த விவகாரத்தை மிக பெரிய அளவில் கையில் எடுத்து இருக்கிறது, நாளைய தினம் கள்ள சாராய மரணம் குறித்து தலைநகர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது பாஜக அதன் பிறகு நேரடியாக ஆளுநரை பாஜகவினர் சந்திக்கின்றனர்.

அப்போது கள்ள சாராய விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுக்கும் பாஜக, உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுக்க இருக்கிறதாம்.

செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து ஊழல் மிக பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது செந்தில் பாலாஜி புலம்ப தொடங்கி இருக்கிறாராம், கள்ள சாராயம் என்றாலும் நம்மை விமர்சனம் செய்கிறார்கள், டாஸ்மாக் வருமானம் என ஒரு பக்கம் போராட்டம் இப்போது போக்குவரத்து துறை ஊழல் வழக்கும் வந்து விட்டதே என தனக்கு நெருக்கமானவர்களிடம் செந்தில் பாலாஜி புலம்பி வருகிறாராம்.

ஆளும் திமுக தலைமை நேரடியாக செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்கள் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படுங்கள் அனைத்தையும் பார்த்து கொள்கிறோம் என ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்கள்.

என்னதான் தலைமை ஆறுதல் சொன்னாலும் உச்ச நீதிமன்றம் போட்டுள்ள உத்தரவு செந்தில் பாலாஜியை அதிர செய்து இருக்கிறதாம் நீதிமன்றம் இரண்டு மாதங்கள் நேரம் கொடுத்து இருப்பதோடு இல்லாமல் தமிழக காவல்துறை காலம் கடத்தினால் நாங்களே நேரடியாக விசாரணை குழுவை அமைக்க நேரிடும் என சொல்லி இருப்பது தான் செந்தில் பாலாஜிக்கு கிழியை கொடுத்து இருக்கிறதாம்.

ஒரே நேரத்தில் கள்ள சாராய மரணம், டாஸ்மாக் கொள்முதல் சர்ச்சை அதை தொடர்ந்து போக்குவரத்து துறை ஊழல் வழக்கும் சேர்ந்து இருக்கிறது நாம் யாருக்கு என்ன செய்தோம் என தனக்கு நெருக்கமாவர்களிடம் புலம்பி தவித்து இருக்கிறார் செந்தில் பாலாஜி, ஆளுநர் விரைவில் தமிழக முதல்வருக்கு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் தொடர செய்வது ஏன் என விளக்கம் கேட்க இருப்பதால் அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் அரங்கேர போகிறது என அதிர்ச்சியில் இருக்கிறதாம் செந்தில் பாலாஜி தரப்பு.