அண்ணாமலையால் உயர்நிலை செயல் திட்ட குழுவை மாற்றயமைத்த திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு சில விமர்சனங்கள் வருவது வழக்கமாக இருக்கும் ஆனால் தற்பொழுது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக அரசிற்கு தொடர்ந்து விமர்சனங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
அதுவும் அந்த விமர்சனங்கள் அனைத்தையும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே கொடுத்துக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார், அதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு நபர்களின் சொத்து விவரங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாவதாக சொத்துப்பட்டியலை வெளியிடும் போதும் கடந்த ஆட்சி காலத்தில் முதல்வர் க ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் செய்திருந்த ஊழல்களையும் கூறியிருந்தார். மூன்றாவதாக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ இரண்டு பாகங்களாக வெளியானது.
முதல் பாகத்திலேயே முதல்வரின் மகன் மற்றும் மருமகனின் ஊழல் உண்மைகளை உடைத்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இரண்டாவது ஆடியோவில் திமுக கட்சி நடக்கும் குழருபடிகளைப் பற்றி கூறியிருந்தார். இந்த விவகாரங்களால் திமுக அமைச்சரவையில் மாற்றமே ஏற்பட்டது அதிலும் பிடி ஆர் பழனி தியாகராஜனின் பதவி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி அண்ணாமலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளுமே திமுக விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் அடிகளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் மூன்றாம் தேதி வருகிறது.
இதனால் ஜூன் 3ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வரை ஓராண்டுகளுக்கு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாகவும், மக்கள் விழாவாகவும், கொள்கைகளின் விழாவாகவும், ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக கொண்டாட திமுக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு திமுக சார்பாக மாவட்ட செயலாளர் கூட்டம் மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் நாளை நடைபெறுவதாக கூறப்பட்டு வந்தது.
இந்த திமுக உயர்நிலை செயல் கூட்டத்திற்கான பொதுச் செயலாளர் துறை முருகன் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார், இந்த நிலையில் திடீரென இந்த உயர்நிலை செயல் திட்ட கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. இருபதாம் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டம் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணத்தையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் .
அதாவது கர்நாடகாவில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் நாளை பதவியேற்க உள்ளனர் இந்த நிகழ்விற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது அதனால் உயர்நிலை செயல்திட்ட குழுவை 21ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுவின் தேதி மாற்றப்பட்டதற்கு கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் பதவி ஏற்ப்பிற்கும் தமிழக முதல்வர் செல்ல உள்ளார் அதனாலேயே இந்த கூட்டம் மாற்றப்பட்டுள்ளதாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியிருந்தார் ஆனால் இதன் பின்னணியில் வேறு ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து புகார்களை வெளியிட்டு வருகிறார், இந்த நிலையில் திமுக உயர்நிலை செயல் திட்ட கூட்டம் நடைபெறும் நாள் அன்று அண்ணாமலை அடுத்த ஆடியோ பதிவை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்ததாலே இந்த கூட்டத்தின் தேதியை திமுக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திமுகவில் மற்றொரு அமைச்சரவை மாற்றமும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதால் திமுகவின் உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தை சற்று யோசித்து வைக்கலாம் என திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.