24 special

2024 நமக்கே ...!ஒற்றை சட்டத்தை வைத்து ஒட்டுமொத்தமாக வளைக்கப்போகும் பாஜக...!

Pm modi,annamalai
Pm modi,annamalai

மத்திய பிரதேசத்தில் பாஜகவின் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது அதில் உரையாடிய பிரதமர் மோடி பொதுசிவில் சட்டம் விரைவில்  அமல் படுத்தப்படும்  என்று கூறினார். பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மக்களுக்குமான சம உரிமை சட்டம் . மேலும் ஜாதி மத இன வேறுபாடு இல்லாத  நாட்டை உருவாக்கும் என பொது சிவில் சட்டத்தின் பயன்களை எடுத்துரைத்தார். பொது சிவில் சட்டத்தில் திருமணம் விவாகரத்து மரபுரிமை வாரிசுரிமை தத்தெடுத்தல் போன்றவை உள்ளடங்கும். பொது சிவில் சட்டத்தின் நன்மைகளாக     மதச்சார்பின்மை உறுதிப்படுத்தப்படும் என்றும் அனைவருக்கும் ஆன சம உரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் பலரும் இதனை ஆதரித்துள்ளனர். 


ஆனால் எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பிரதமர் மோடியின் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேசம் இரண்டு விதமான சட்டங்களை கொண்டு இயங்க முடியாது என்ற  கருத்தையும் தெரிவித்து வருகின்றனர்.  பொது சிவில் சட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள  நிலையில் நாட்டில் மதத்தை வைத்து பிரதமர் மோடி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். 

மேலும் பிரதமர் மோடி “ஒரு நாட்டினுடைய சட்ட ஒழுங்கை  சீர்குலைப்பதற்கும் மத கலவரத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடுமையாக சாடினார். வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் மக்கள் பா.ஜ.கவிற்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார். மேலும்  பொதுசிவில் சட்டம் நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்றும் தனது விமர்சனத்தை தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் கூட்டத்தில் பேசியபோது பாஜகவின்  செயல்கள் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கின்றன மேலும் தமிழகத்தில் நடைபெறுவது பாஜகவுக்கும் திமுகவிற்குமான யுத்தம் அல்ல மாறாக பாஜகவிற்கு விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கும் இடையில் உள்ள யுத்தம் என்றும் , தமிழ்நாட்டில் பாஜக சட்ட ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றை தடுக்க முயல்கிறது  எனவும் அரசியல் ஆதாயங்களுக்காக அவர்கள் மதத்திற்கு இடையே வெறுப்பை வளர்க்கிறார்கள் என்றும் திருமாவளவன் பாஜகவின் மீது குற்றம் சாட்டினார்.

பொது சிவில் சட்டம் அமலுக்கு வரக்கூடாது என  எதிர் கட்சிகள் போராடி வரும் நிலையில் பா.ஜ.க அதனை அமல்படுத்துவதற்கான வேலைகளை தொடங்கி உள்ளது.இது பற்றி மத்திய அமைச்சர் சங்கர் பிரசாத் கூறுகையில் பொது சிவில் சட்டம் பா.ஜ.காவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு செயல்பாடுகள் நடைபெற்று வரும் போது அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை பார்க்க மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை பழங்குடியினர் மற்றும்  இஸ்லாமியர் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற உறுதியான கருத்து எழுந்துள்ளது .

இப்படி அனைத்து எதிர் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவினர் பொது சிவில் சட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்ற கருத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் நிலவி வந்தது. தற்போது பாஜகவினர் உறுதியாக பொது சிவில் சட்டத்தை திட்டவட்டமாக நடைமுறைப்படுத்த உள்ளனர். 

எப்படியாவது வருகின்ற 2024ஆம் தேர்தலுக்குள் இந்த பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்ற முயற்சியில் பாஜகவின் இருப்பதாகவும்  ஒருபுறம் பொது சிவில் சட்டம் மறுபுறம் ராமர் கோவில் என இந்த இரண்டு திட்டங்களையும் அமல்படுத்தி விட்டு தான் 2024 தேர்தலில் களத்தில் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.