24 special

இதுல பொழைச்சா போச்சு...!மொத்தமாக கையில் எடுக்கும் உதயநிதி...!

Udhayanidhi,mkstalin
Udhayanidhi,mkstalin

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராகவும் தற்போது விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது  முதல்வர் செல்ல முடியாத நிகழ்ச்சிகளுக்கு துணை முதல்வர் போன்று இவரே சென்று வருவதும் முதல்வருக்கு கொடுக்கப்படும் அனைத்து மரியாதைகளும் அவருக்கும் கொடுக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. 


மேலும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக தனது வாக்குறுதியாக குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்தாமல் பெரும் விமர்சனங்களை சந்தித்து வந்தது. அதிகரித்து வந்த விமர்சனங்களை பொறுக்க முடியாமல்  திமுக ஒரு வழியாக மகளிர் உதவி தொகை திட்டத்தை அமல்படுத்துவதான முடிவு செய்து அதற்கான சில வரையறைகளை வெளியிட்டது. இந்த வரையறையாலும் தற்போது பெரும் தலைவலியை சந்தித்து வருகின்ற திமுகவிற்கு சில தரப்புகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது மேலும் மக்களிடம் மேற்கொள்ளப்படுகின்ற கலந்தாய்விலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான திட்டத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

அதாவது இந்த மகளிர் உதவி தொகை திட்டத்தில் இருக்கின்ற சிக்கல் எதுவென்றால் தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே இந்த திட்டத்தின் உதவித்தொகை கொடுக்கப்படும் என்பதால் உதவித்தொகை கொடுத்து வாங்குபவர்களை விட இந்தத் தொகையை வாங்காமல் இருப்பவர்கள் மூலமாக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை தற்போது நிலவுவதால் அதனை சமாளிக்கும் பொறுப்பு அமைச்சர் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரது ஆட்சியில் அனைத்து தமிழக மக்களுக்கும் இலவச டிவிகளை வழங்கினார். அந்தத் திட்டத்தில் யாரையும் பிரிக்காமல் அனைத்து மக்களுக்கும் அதனை வழங்கினார் ஏன்னென்றால் ஏழை மக்களுக்கு வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு வழங்காமல் இருந்தால் அது விமர்சனத்திற்குள்ளாகும், மேலும் தேர்தலில் அது எதிரொலிக்கும் என உணர்ந்து அதனை புறக்கணிப்பதற்காகவே கருணாநிதி இந்த திட்டத்தை அனைத்து மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார். 

ஆனால் தற்போது முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலமாக குறைவான சிலருக்கே சென்று சேரும் நிலை  ஏற்பட்டுள்ளது! முன்பு கருணாநிதி யோசித்த அனைத்தும் இந்த திட்டத்தில் கண்டிப்பாக நடக்கும் எனவும்,  உதவித்தொகை பெரும் பட்டியலில் எனது பெயர் இல்லை! நான் பதிந்திருந்தேன்! எனது பெயர் நீக்கப்பட்டது! எனக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை! அவர் பெயர் உள்ளது! என்னை விட அதிக வருமானம் பெறுபவர் அவர்! என்று மக்கள் மத்தியில் பல குற்றச்சாட்டுகள் எழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் மேலும் இது எந்த ஒரு மாநிலங்களிலும் அமல்படுத்தாத ஒரு திட்டமாக கடும் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் அறிவாலய வட்டாரங்கள் கணித்துள்ளது.

அதனால் இத்திட்டத்தை திறம்பட முடிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் தனது மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இந்த திட்டத்திற்கு பொறுப்பாளராக நியமித்துள்ளார். இப்படி பெரிய பொறுப்பை உதயநிதிக்கு கொடுப்பதால் என்ன நடக்குமோ என திமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் தான் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக அரசிற்கு விழப்போகும் வாக்கு என்பதாலும் இதனை மக்களும், தமிழக அரசியல் களமும் மிகவும் கவனமுடன் உற்று நோக்கி வருகிறது.