செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தன் கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது அதே சமயத்தில் அமலாக்க துறையின் கஸ்டடியில் செந்தில் பாலாஜியை எடுக்க விடக்கூடாது என்று செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பினர் மற்றும் திமுகவின் வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். அதாவது செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ததன் வழக்கு விசாரிக்கப்பட்டு இரு வேறு விதமான தீர்ப்புகளை அதன் நீதிபதிகள் அறிவித்தனர். ஒரு நீதிபதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவல் எடுக்கக் கூடாது என்றும் மற்றொரு நீதிபதி அமலாக்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மூன்றாவது நீதிபதியை நியமித்து இவ்வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார் .
முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா திறம்படவாதாடி அமலாக்கத்துறை தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு வரும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்றாவது நீதிபதியின் விசாரணை இன்னும் முடிவு பெறவில்லை அதன் விசாரணை முடிவு பெறப்பட்டு தீர்ப்பளித்தவுடன் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும் மேலும் அமலாக்கத்துறை தரப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மூன்றாம் நீதிபதியாக நீதிபதி சி வி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு அவர் முன்பாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் செந்தில் பாலாஜியின் தரப்பில் வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ ஆஜராகி உள்ளார் மேலும் அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி உள்ளார்.
வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த வழக்கை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று தனது வாதத்தை முன் வைத்தார் ஆனால் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அதில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தங்கள் சார்பாக ஆஜராகி வாதாட உள்ளார் அதற்காக இந்த வழக்கை தள்ளி வையுங்கள் என்ற கோரிக்கை முன்வைத்தார். இருதரப்பு வாதம் மற்றும் கோரிக்கையை ஏற்ற நீதிபதி கார்த்திகேயன், இந்த வழக்கு விசாரணை எப்போது செய்யப்படும் என்பதை நாளை முடிவு எடுக்கப்படும் என்றும் அதோடு இருதரப்பிலிருந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் உச்ச நீதிமன்றமே இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய காரணத்தினால் வழக்கமாக பட்டியலிடப்படும் வழக்குகளை நான் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி மனைவி தரப்பினர்கள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் திமுக வழக்கறிஞர் செந்தில் பாலாஜி வழக்கை கையாள முடியவில்லை என்கிற ரீதியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இதில் ஆஜராவார் என்று மூன்றாம் நீதிபதியின் விசாரணையில் கோரிக்கை முன் வைத்துள்ளனர் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது அதிக பணத்தை வக்கீல் தொகையாக நிர்ணயித்து வாதாடும் கபில் சிபலை தற்போது செந்தில் பாலாஜியின் வழக்கில் கொண்டு வந்துள்ளனர். நாளுக்கு நாள் வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பு பின்னடைந்துவரும் காரணத்தினால் திமுக தரப்பு தற்போது அரண்டு போய் உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.