24 special

3 முருகன் ஒரே கருவறையில்.... அதிசயத்திலும், ஆச்சர்யம்.....

MURUGAN TEMPLE
MURUGAN TEMPLE

அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய திருக்கோவில் பொன்னேரிக்கு அருகில் உள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது. இ கோவிலில் மிகவும் அழகான சிற்பங்கள் அமைந்திருக்கிறது. மேலும் இந்த கோவிலின் தலபுராணமே அந்தக் கோவிலின் சிற்பத்தில்  பார்க்கும் பொழுதே நமக்கு தெரியவரும். அந்த அளவிற்கு மிகவும் நுணுக்கமான சிற்பக் கலைகளை பயன்படுத்தி இந்த கோவிலில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்குள் செல்லும் பொழுதே ஒரு நேர்மறையான எண்ணங்களை உணர முடியும். மேலும் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவரும் பலவிதமான வேண்டுதல்களை வந்து அங்கு இருக்கும் முருகனிடம் கேட்டு வேண்டி செல்கின்றனர். மேலும் இந்த கோவிலில் தான் ஆண்டிகள் சிலர் முருகனை வழிபட்டதாகவும், அப்போது தலை யாத்திரைக்கு சென்ற பக்தர் ஒருவர் இங்கு தங்கி நீராடி விட்டு செல்லலாம் என்று பக்கத்தில் சென்று கேட்கும் பொழுது பக்கத்தில் ஏதும் குலம் குட்டைகள் எதுவும் கிடையாது என்று கூறியுள்ளனர்.


அது அந்த வழியாக ஆண்டி கோலத்தில் வந்த சிறுவன் ஒருவன் தனது வேலினை எடுத்து அங்குள்ள நிலத்தினில் குத்தியுள்ளார். குத்திய உடன் அந்த நிலத்திலிருந்து நீர் பெருகி வந்ததாகவும், அதன் பிறகு இந்த கோவிலுக்கு வந்து சில ஆண்டிகள் முருகனை வழிபட்டு சென்றனர். மேலும் இந்த கோவிலில் அமைந்திருக்கும் சிற்பங்கள் அனைத்தும் ஒரு சன்னதி போலவே பார்ப்பதற்கு மிகவும் அமைந்திருக்கும். இந்தக் கோவிலின் மூலவராக முருகன் பாலசுப்ரமணியனாக அமைந்திருக்கிறார். மேலும் தில்லை நடராஜர், வள்ளி சண்முகர், காசி விசாலாட்சி மற்றும் காசி விஸ்வநாதர் மேலும் விநாயகர் போன்றோர் தனித்தனி சன்னதியில் அமைந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இந்தக் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்று பார்த்தால் சித்திரை மாதம் பிரம்மோற்சவம், வைகாசி மாதம் விசாகம், ஆடி கிருத்திகை  மற்றும் கார்த்திகை மாதத்தில் குமார சஷ்டி, கந்த சஷ்டி மற்றும் தைப்பூசம் போன்றவை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் நாட்களாக இருந்து வருகிறது. மேலும் இந்த கோவையில் ஒரு தனி சிறப்பாக கூறப்படும் விஷயம் ஒன்று உள்ளது!! அது என்னவென்று பார்த்தால்.... 

கோவிலில் அமைந்திருக்கும் முருகன் காலையில் குழந்தை வடிவிலும், மதியம் நேரத்தில் இளைஞனாகவும் மற்றும் மாலை நேரத்தில் முதியவராகவும் ஒரே நாளில் மூன்று தோற்றங்களில் காட்சியளித்து வருகிறார். மேலும் இந்த கோவிலில் தான் பிரம்மனிடம் முருகன் பிரணவ மந்திரத்திற்கான அர்த்தத்தை கேட்டு, அதற்காக அவரை சிறையில் அடைத்த போது முருகன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு அதிகார தோற்றத்துடன் காட்சியளித்தாராம்!! அதேபோலத்தான் அதிகார தோற்றத்துடன் இந்த கோவிலிலும் காட்சியளிக்கின்றார். மேலும் பக்தருக்காக தனது வேலினை நிலத்தில் குற்றி உருவாக்கிய ஆறு இன்றளவும் அந்தப் பகுதியில் வற்றாத ஆறாக இருந்து வருகிறது. மேலும் பல வேண்டுதலுக்காக இந்த திருக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். 

மேலும் குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று தொட்டில் கட்டி வழிபட்டு வருவதால் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது என்று ஏற்கனவே சென்று வந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு வந்த வேண்டி குழந்தை வரம் கேட்டால் மிகவும் புத்திசாலையுடன் குழந்தை பிறக்கும் என்று கூறுகின்றனர். அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணுபவர்களும், ஏற்கனவே உள்ள பணியில் மேலும் அதிகாரம் வேண்டும் என்று நினைத்து இந்த கோவிலுக்கு வந்து வேண்டுதல் செய்தால் நடக்கும் என்று கூறுகின்றனர். மேலும் உடலில் தீராத நோய்கள் உள்ளவர்கள் கூட இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதால் அவர்களின் நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடுகிறது என்று சொல்லப்படுகிறது.