24 special

மத சர்ச்சையில் சிக்கிய இர்பான்!!! சரியான பதிலடி!!!

MUHAMMAD IRFAN
MUHAMMAD IRFAN

சென்னையை சேர்ந்த முகமது இர்பான் இர்ஃபான்ஸ் வியூ என்னும் ஒரு யூடுபே சேனலை ஆரம்பித்து அதனில்  ஃபுட் ரிவ்யூ வீடியோக்களை பதிவு செய்து இன்று ஒரு பிரபல youtube ஆக இருந்து வருகிறார். இவரின் ரிவியூகள் மக்களின் மனதை கவரும் வகையிலும் பலரை மகிழ்விக்கும் நபராக இருப்பதால் இதனை அதிக அளவில் மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு முதல்  தற்போது வரையிலும் தனது youtube சேனலில் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்து அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ள ஒரு முன்னணி youtubeபராகவும் இவர் இருந்து வருகிறார்.முதலில் சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்குள் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று அதில் உள்ள உணவுகளை சுவைத்து ரிவ்யூ கொடுத்து வந்த இர்பான் இதனைத் தொடர்ந்து துருக்கி, தாய்லாந்து மற்றும் துபாய் போன்ற பிற வெளிநாடுகளுக்கும் சென்று அங்கு உள்ள பிரபலமான உணவுகளை சுவைத்து அதற்கும் ரிவ்யூ செய்து வந்தார். இதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இவர் அதன் பின் திரை பிரபலங்களான விஜய் சேதுபதி மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.


இவரு youtube களிலிருந்து பிரபலங்கள் வரை அனைவரும் இவரை வரவேற்க தொடங்கியவுடன் முதல் முதலில் ஹிப் ஹாப் தமிழா உடன் நண்பன் ஒருவன் வந்த பிறகு.. என்னும் கோலிவுட்டில் அறிமுகமானார்!! முதலில் இவராகவே பல ஹோட்டல்களை தேடி சென்று ரிவியூ எடுத்தார் ஆனால் தற்போது பல ஹோட்டல்கள் இவரை அழைத்து ரிவ்யூ எடுக்குமாறு கூறும் அளவிற்கு இவரின் உழைப்பு இன்று உயர்ந்துள்ளார்!! என்னதான் இப்படி ஒரு மனிதன் தனது உழைப்பால் உயர்ந்து வந்தாலும் கூட அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டு தான் வருகிறார். அதுபோலவே தான்  இர்பானின் கதையும்!! இவரின் மீது அடிக்கடி ஏதாவது புகார்களும், விமர்சனங்களும் எழுந்த வண்ணமே தான் இருந்து வருகிறது. சமீபத்தில் இவரின் திருமணத்தின்போது கூட  இவர் அதிக அளவில் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு இவரின் மதத்தை சேர்ந்தவர்களே பலவிதமான எதிர்ப்புகளை காட்டி வந்தனர். ஆனால் அவ்வபோது இவை அனைத்திற்கும் பதிலடி கொடுத்து வந்தார் இர்பான்!! இப்படிப்பட்ட சமயத்தில் தமிழக ஆளுநர் இர்ஃபான் அழைத்து விருந்தும் அளித்திருந்தது விமர்சனங்கள் செய்பவர்களுக்கு ஒரு பதிலடியாகவும் அமைந்திருந்தது. 

 இந்த நிலையில் திரைப்படங்களிலும் நடித்து வரும் இர்பான் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் சீசன் 5 குக்காக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டி அதற்கு பதிலடியம் கொடுத்துள்ளார் இவர்!! அது என்னவென்றால்!!!! சமீபத்தில் ஒரு கடைக்கு சென்று ரிவ்யூ கொடுத்து அந்த வீடியோவை தனது youtube சேனலில் பதிவிட்டு இருந்தார். அந்த கடையானது அவரின் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் கடை என்பதனால் இவர் அதிகமாக அவரின் மதத்தை சேர்ந்தவர்களின் கடைகளுக்கு மட்டுமே ரிவ்யூ கொடுத்து வருகிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இவர் ரிவ்யூ கொடுக்கும் கடைகளில் 99% இவரின் மதத்தைச் சார்ந்த கடைகளாகவே உள்ளது.1% மட்டுமே மீதமுள்ள மதத்தினை சார்ந்த கடைகளுக்கு ரிவ்யூ கொடுத்து வருகிறார் என்று விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இர்பான் தனது இணையதள பக்கத்தில் "அது எப்படி டா என் மதத்தை சேர்ந்தவர் கடை பேர் இருந்தா மட்டும், அங்க வந்து நொட்டுறீங்க??? என்றும் அதற்கு முன் ரிவ்யூ செய்த இனத்தை சேர்ந்த கடைகளையும் கூறியுள்ளார். மேலும் பிரச்சனை என்கிட்ட இல்லடா பரதேசி எல்லாத்தையும் மதவெறியா திணிக்கிற உன் கிட்ட தான்டா இருக்கு செங்கல் சைக்கோ என்று தனது பதிலடியை கொடுத்து உள்ளார்!!!