நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒன்றிணைந்துள்ள விஜய் மக்கள் இயக்கம் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது, சமூக பணிகளை தொடர்ந்து செய்து வந்த விஜய் மக்கள் இயக்கம் சமீப காலமாக அரசியலில் நுழைவதற்கான காய்களை நகர்த்தி வருகிறது.
தொடக்கத்தில் அரசியல் பற்றிய கேள்விகள் கேட்டாலே மறைமுகமாக பேசி வந்த நடிகர் விஜய் தற்போது எந்த ஒரு கேள்வியும் அரசியல் ரீதியாக கேட்கப்பட்டால் மௌனம் சாதித்து வருகிறார். அதிலும் குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியாக உள்ள புஸ்ஸி ஆனந்த் அரசியல் குறித்த கேள்விக்கு விரைவில் விஜயே நேரடியாக பதில் கூறுவார் என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியிலும் அரசியலிலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஜய் பிறகு தீரன் அண்ணாமலையின் நினைவை நினைவு கூர்ந்து அவரின் சிலைக்கும் மாலை அணிவிக்கவும் தனது மக்கள் இயக்கத்திடம் தெரிவித்துள்ளார். அதற்குப் பிறகு ஒரு மாபெரும் விழாவை ஏற்பாடு செய்த நடிகர் விஜய் இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களை வென்றுள்ள மாணவ மாணவிகளை ஒவ்வொரு தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவப்படுத்தினார்.
அதுமட்டுமல்லாமல் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையும் தொடங்கப்பட்டது. இவை அனைத்திற்கும் காரணம் விரைவில் நடிகர் விஜய் அரசியலில் வர உள்ளது நடிகர் கமலஹாசன் போல ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார் என்று அரசியல் வட்டாரங்களில் வெளிவந்த இந்த தகவல் விஜயின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளில் பொதுக்கூட்டம் பனையூரில் நடைபெற்றுள்ளது அதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த், இயக்கத்திற்கு மக்களுக்கும் இடையே இருக்கும் தொலைவை இணைக்கும் பலமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும், அதோடு இனிமேல் இயக்கத்தில் இருந்து தெரிவிக்கப்படும் ஒவ்வொரு அறிவிப்புகளும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் ஹேஷ்டாக்குடன் பதிவிட வேண்டும் என்று தலைமையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவை அனைத்தையும் நிர்வாகிப்பதற்காக மாநகரம், மாவட்ட, ஒன்றியம், நகரம் ,வட்டம் என்ற அனைத்து பகுதிகளுக்கும் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என்று கிட்டத்தட்ட 30,000 பேர் தகவல் தொழில்நுட்ப அணிக்கு தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் 30000 பேரின் பணிகளாக விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிகழ்ச்சிகள் இவர்கள் தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவிட்டு எந்த ஒரு ஜாதி, மதம், இனம், மொழி என்ற வட்டத்திற்குள் சிக்காமல் சமூக வலைதளத்தில் செயல்பட வேண்டும் என்றும் தலைமையின் அனுமதி இல்லாமல் மற்றவரின் பதிவிற்கு லைக்கோ கமாண்டோ செய்ய க்கூடாது என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் அப்டேட் ஆகவும் ஆக்டிவாகவும் இருப்பதன் மூலமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் இந்த நடவடிக்கை விஜய்க்கு சாதகமாக அமையும் எனவும் நம்பப்படுகிறது இவை அனைத்திற்கும் பின்னால் அரசியல் கணக்குகளே உள்ளது என்று வெளிவந்த கருத்தால் ஆளும் திமுக அரசை கிடுகெடுக்க வைத்துள்ளது. காரணம் விஜய் அரசியல் வருவது யதார்த்த ரீதியில் திமுகவின் அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதிக்குத்தான் பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.