24 special

முதல்வர் ஸ்டாலின் சந்தோஷமாக செய்தி வெளியிட்ட அடுத்த நொடி இந்தியா கூட்டணியில் விழுந்த பெரிய இடி...!

mk stalin,
mk stalin,

கடந்த ஜூன் மாதம் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் நிதிஷ்குமார்  தலைமையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் பெங்களூரில் 26 கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரும் உருவானது. 


இதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக எதிர்க்கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் இதனை வைத்து பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன

வடமாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால்  எதிர்க்கட்சிக்குள்ளே கடும் போட்டி நிலவி வருகிறது அதாவது பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலும் போட்டியிடப் போவதாக அறிக்கை வெளியிட்டது தேர்தல் களத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 

இது மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சியில் இருக்கும் சரத் பவார் நீண்ட நாட்களுக்கு எதிர்கட்சி கூட்டணியில் இருக்க மாட்டார் என்றும் அஜித் பவர் அவரை பாஜகவுடன் கூடிய சீக்கிரத்தில் இணைத்து விடுவார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருவதால் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கின்ற முக்கிய தலைவர்கள் தற்போது பாஜகவின் பக்கம் சாய்வது எதிர்க்கட்சி கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்தியா கூட்டணியில்  மூன்றாவது கூட்டணி ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மூன்றாவது கூட்டத்தில் பிரதம வேட்பாளரை நியமிப்பது குறித்து  முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார் இது மட்டும் அல்லாமல் தொகுதி பங்கீடுகள் குறித்து முடிவெடுப்பது இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு தலைவரை நியமிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

ஆனால் நிதீஷ்குமார் தனக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராக விருப்பமில்லை என்று கூறியதால் தற்போது எதிர் கட்சிகள் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது இப்படி முதல்வர் குட்நியூஸ் சொன்ன அடுத்த கணமே பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு தலைவராக நான் இருக்க மாட்டேன் என்று தெரிவித்தது தற்போது திமுகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்தியா கூட்டணியை உருவாக்கின முக்கிய நபர்களில் ஒருவர் நிதிஷ்குமார் . அவரே தற்போது இவ்வாறு பேசுவது கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நிதிஷ் குமார் கூறுகையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில்  அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து; அனைவரும் ஒன்றாக போட்டியிடுவதை மட்டுமே நான் விரும்புகிறேன் என்றும்  சில அரசியல் கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணையவுள்ளதாகவும் தேர்தலுக்கு முன் அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் பயணித்து வருவதாகவும் தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.இதனால்  இந்தியா கூட்டணி தற்போது கலக்கத்தில் இருந்து வருகிறது. 

இப்படி இந்தியா கூட்டணியில் மும்பை கூட்டத்தை பற்றி பிரதமர் முதல்வர் பேசிய அடுத்த கணமே நிதிஷ் குமார் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதை அறிவித்ததால் முதல்வர் ஸ்டாலினின் கிங் மேக்கர் ஆசையில் மண் விழுந்துள்ளது எனவும் தற்போது ஒவ்வொரு தூண்களாக  இந்தியா கூட்டணியில் இருந்து விலகி வருவதால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்திய அளவில் அரசியல் ஆசையில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கே இது பின்னடைவே எனவும் கூறப்படுகிறது...