24 special

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேயர் பிரியா...! இப்போ இது தான் ட்ரெண்ட்...!

Mayor priya
Mayor priya

மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தால் அது எப்போதும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆவது நிச்சயம், அவர் சொன்ன கருத்துக்கள் மக்களை சென்று அடைக்கிறதோ இல்லையோ அவர் பேட்டியின் இடையில் ஏதாவது ஒன்றை உளற அல்லது மாற்றி சொன்னால் அதனை எதிர் கட்சிகள் பெரிய அளவில் விமர்சனத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்கள்.


கொசு ஒழிப்பு திட்டம் தொடங்கி தக்காளி என் டிபார்ட்மென்ட் இல்லை என்று கூறியது முதல் முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு கான்வாயில் தொங்கி சென்று சர்ச்சையில் சிக்கியது முதல் மேயர் பிரியாவை சுற்றிய சர்ச்சைகள் ஏராளம்.

அந்த வகையில் தற்போது புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுகளை தரம் பார்க்க மேயர் பிரியா வருகிறார் என முதலில் செய்தியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது இதையடுத்து செய்தியாளர்கள் வந்தனர்.

அப்போது பள்ளியில் உணவுகளை ஆய்வு செய்த மேயர் பிரியா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை செய்தியாளர்களுக்கு வாசித்து காட்டினார். அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்க இப்போது பள்ளியில் ஆய்வு நடத்த காரணம் என்ன என கேட்டார்.

அதற்கு மேயர் முதல் நாள் திட்டத்தை தொடங்கி வைத்தோம் ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் உணவுகள் சரிவர வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யதான் இப்போது வந்து இருக்கிறேன் என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர் மீண்டும் ஒரு கேள்வியை கேட்டார், நீங்கள் ஆய்வு செய்ய வருகிறோம் என பள்ளிக்கு தகவல் கொடுத்து விட்டு செய்தியாளர்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டு வந்தால் எப்படி மேடம் சரியா இருக்கும் என பதில் கேள்வி கேட்க திரு திருவென சில நிமிடம் மேயர் முழிக்க உடனே அருகில் இருந்த  IAS அதிகாரி ராதா கிருஷ்ணன் உடனடியாக செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முன் வந்து மேயர் பிரியாவை செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளில் இருந்து காப்பாற்றினார்.