தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் தமிழகத்தை சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் சிங்க் கம்பெனி ஒன்றை வாங்கி அதில் தமிழக மின்சாரத்துறை மூலம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி வரை மின்சாரத்தை பெற பேரம் பேசிவருவதாகவும் இதை உடனே சம்பந்தபட்ட அமைச்சர், அரசு அதிகாரிகள் நிறுத்தி கொள்ளவேண்டும், ஆரம்ப நிலையில் இருப்பதால் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பெயரை குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
மேலும் இதையும் மீறி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால் பேரம் பேசிய ஆவணங்கள் வெளியிடப்படும் எனவும் இதை எச்சரிக்கையாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது கனிவாக சொல்வதாகவும் எடுத்து கொள்வது அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்., இந்த சூழலில் பாஜக மாநில பொருளாளர் SR.சேகர் சூசகமாக சில குறிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது சமூகவலைத்தளத்தில், பஞ்சாப்பில் பிறந்த தமிழக IAS அதிகாரி ஏன் மத்திய பெண் மந்திரியைப் பார்த்து மின்சார அணில் மந்திரியின் சில ரகசிய File களை போட்டோ எடுத்து தருகிறார்?
விடியலுக்கு இனி தீராத தலைவலிதான்.
2024க்கு போட்ட 10000 கோடி. Target கானல்நீர் தானோ? #381பாஜக பாஜக என குறிப்பிட்டுள்ளார்.
யார் அந்த பாஞ்சாப் அதிகாரி யார் அந்த அணில் அமைச்சர் யார் அந்த பெண் மந்திரி என இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது, ஆமாம் உண்மையில் கோட்டையில் இப்போது இந்த மின்சாரத்துறை ஒப்பந்தம்தான் விவாதமாக மாறியுள்ளது, ஆமாம் மிக பெரிய ஊழல் சம்பவம் வெளிவரப்போகிறதோ?
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான SR.சேகர் சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட்ட சம்பவம் ஆளும் கட்சியிலும் அதிகாரிகள் மத்தியிலும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, இதற்கு முன்னர் SR சேகர் ஆளும் அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்க நினைக்கும் திமுகஅரசே,
பாரத பிரதமருக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட கலைஞர் செய்தி TV யின் மீது நான் அளித்த புகாருக்கு இன்னும்FIR பதிவு இல்லையே ஏன்?
கல்யாணராமன் கைது மீது காட்டிய வேகம் கலைஞர் டிவி-வன்னியரசு மீது இல்லையே ஏன்? எனவும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.