24 special

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது 5 வழக்கு.. அடுத்தடுத்த தகவலால் பரபரப்பு..!

Savuku Shankar
Savuku Shankar

பிரபல யூ டியூபரும் சவுக்கு ஊடகத்தின் தலைவருமான சவுக்கு சங்கரை இன்று அதிகாலையில் அதிரடியாக காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில், அவர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சவுக்கு சங்கர் ஆளும் கட்சியின் அரசியல் குறித்து தனது ஊடகத்தில் மக்களுக்கு வெளிச்சம் போட்டுவந்தார். குறிப்பாக பல்வேறு தகவல்களை ஊடகங்கள் மத்தியில் ஓபனாக பேசி வந்தார். தொடர்ந்து பல்வேறு புது தகவல்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த இடத்திற்கு சென்று சோதனை செய்யவுள்ளார்கள் என அனைத்து தகவலும் இணயத்தில் முதல் ஆளாக பதிவிடுபவர் சவுக்கு சங்கர். இவரது ஊடகத்தை தொடர்ந்து, பல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்து வருபவர் சவுக்கு சங்கர்.

காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி பின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சங்கர், சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் அப்போது பாஜக, அதிமுக கட்சியை விமர்சித்து வந்தார். இந்த நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுகவை ஆதரிப்பதை விட்டு எதிர்க்க தொடங்கினார். தொடர்ந்து திமுக ஆட்சியின் அம்பலம் குறித்தும். அடுத்து வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் உதயநிதிக்கு போட்டியாக திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். அதேபோல் திமுகவின் ஒவ்வொரு அசைவுகளையும் வெளியில் கொண்டு வந்து இருந்தார்.

இது திமுக கட்சிக்கு பாதிப்பாக பார்க்கப்பட்டது, இந்த நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், சவுக்கு சங்கர் கொடைக்கானல் செல்வதற்காக தேனியில் இருந் நிலையில் இன்று காலை அவரை அதிரடியாக கைது செய்தது காவல் துறை.

அவரை கோவை அழைத்து செல்லும் வழியில் காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளானது. அதில் சவுக்கு சங்கரின் காலில் லேசான அடிபட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர் மீது காவல்துறை பதிவிட்ட வழக்குகள் வெளியாகியுள்ளது. அதன்படி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்ள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ளது. ஒரு பக்கம் சவுக்கு சங்கரை கைது செய்தது போல் அவரது ஊடகத்தில் பணி புரிந்த பணியாளர்கள் அனைவரையும் கைது செய்வதாக கூறப்படுகிறது.

மேலும், கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு திமுக பக்காவாக பிளான் போட்டு அவர் மீது குண்டாஸ் போடப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகிறது. சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் திமுகவின் கோல்மால்களை வெளியில் சொன்னால் இது தான் நடக்குமா ? என கேள்விகளை எழுப்புகின்றனர். அதுபோல், சவுக்கு சங்கர் பாத்ரூமில் வழுக்கி விழுவது உறுதி என்றும் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். சவுக்கு சங்கர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் அடுத்த கட்ட நகர்வு குறித்து உண்மை தகவல் வெளியாகும்  என்று கூறப்படுகிறது.