Cinema

தீனா ரீரிலிஸ் அப்பவே ஆதங்கத்தை கொட்டிய தியாகராஜன்..... விமர்சனத்தால் வதைக்கும் அஜித் ரசிகர்கள்!

AJITH , THIYAGARAJAN
AJITH , THIYAGARAJAN

தமிழ் சினிமாவில் என்றுமே இரு பெரும் முக்கிய நடிகர்களுக்கு இடையே போட்டி நிகழ்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் ரஜினி கமலுக்கு பிறகு அஜித் விஜய் என்ற இரு நடிகர்களிடையே போட்டியானது இன்று வரை நிகழ்ந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் இவர்களை இரண்டு பேருமே ஆரம்பத்தில் ஒன்றாக நடித்துள்ளனர் பிறகு தங்களது திறமைகளை வெளிக்காட்ட தனித்தனியாக நடிக்க ஆரம்பித்து பிறகு அதுவே தற்போது இரு நடிகர்களின் ரசிகர்களிடையே பெரும் சண்டை ஏற்பட காரணமாக வந்துவிட்டது. சரி இதில் இரண்டு பேருக்கும் இடையில் உள்ள சண்டைகளை பற்றி நாம் பார்க்கப் போவதில்லை அஜித் குறித்தும் அவரைக் குறித்து சமீபத்தில் ஒரு முன்னணி நடிகரின் தந்தையும் முன்னாள் நடிகருமான ஒருவர் தனது வயிற்றெரிச்சலை கோட்டியுள்ளார் அதையே நாம் பார்க்க போகிறோம்..! ஹைதராபாத்தில் பிறந்த அஜித் அமராவதி என்னும் தமிழ் திரைப்படத்தின் நடித்தார். ஆனால் தெலுங்கில் அவருக்கு கிடைத்த வரவேற்பு போன்று தமிழில் அமராவதி திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு  1995ஆம் ஆண்டு அஜித்தின் அடிப்பில் வெளியான ஆசை திரைப்படம் அவரது நடிப்பில் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது.


அதைத் தொடர்ந்து அஜித் நடித்த காதல் மன்னன், காதல் கோட்டை, வாலி, தீனா, அமர்க்களம், ரெட் ஆகிய படங்கள் இன்னமும் அஜித்தின் வெற்றிப் பாதையில் உள்ள முக்கிய படங்களாகும். மேலும் அமர்களம் திரைப்படத்தில் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திரைப்பயணத்தைத் தாண்டி திரையில் உள்ள மற்ற நடிகர்களுடனும் பணியாளர்களுடனும் நெருங்கி பழகுபவர் நடிகர் அஜித்குமார் ஏனென்றால் அவரைக் குறித்து சினிமா திரையில் எவரிடம் கேட்டாலும் ஏதாவது ஒரு உதவியை தனக்கு செய்தார் என்று அந்த நபர் கூறிவிடுவார் அப்படி தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் வழங்கியுள்ளார் அது மட்டுமின்றி பல நேரங்களில் இயற்கை பேரிடர்களின் பொழுது கூட பல உதவிகளை செய்து இருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் வெளியில் வராமலே போய்விடுகிறது! முன்னதாக அஜித் தனது ஆரம்பத் சினிமா வாழ்க்கையில் சாமி, காக்க காக்க, கஜினி ஆக்கி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்துள்ளார் ஏனென்றால் இவருக்கு நடிப்பை விட ரேசிங்கும் ரோன் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளின் ஈடுபடுவதுமே பிடித்துள்ளது. 

தற்போது கூட மைக் தொழிலை அஜித் தொடங்கியுள்ளதாகவும் அந்த தொழிலும் அவருக்கு நல்ல வருமானத்தை பெற்று தருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது அடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்னி என்ற திரைப்படம் அஜித்தின் வசம் உள்ளது. இந்த நிலையில் கடந்த மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவரது வெற்றி திரைப்படமான தீனா ரீரிலிஸ் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் எண்பதுகளில் முன்னணி நடிகராக வலம் வந்த தியாகராஜன் முருகதாஸின் முதல் படமான தீனா முதலில் தனது மகனான பிரசாந்திற்கு வந்ததாகவும் அப்போது பிரசாந்த் படம் பண்ணுவதற்கு நேரம் இல்லாததால் கொஞ்சம் காலம் கழித்து பண்ணலாம் என்று தனது மகனுக்காக தியாகராஜன் சொன்னதாகவும் அதற்குள் முருகதாஸ் வேறொரு ஹீரோவை வைத்து எடுத்துவிட்டார் என்றும் கூறியுள்ளார். இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் தியாகராஜரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.