தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்டுக்காக தான் என்று வாக்குறுதியை கொடுத்தது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் என்று பிரச்சாரம் செய்து வந்தனர்.தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் நீட் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. இதனால் நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் உயிரை மாய்த்து கொண்டுவந்தனர். அப்போதுஎல்லாம் நீட்டை ஒழிப்போம் என்று திமுக அரசு கண்துடைப்பு பேச்சு பேசினார்கள்.
இந்நிலையில் அன்று, 'ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்து விடுவோம்' என்றவர்கள், இன்று, 50 லட்சம் கையெழுத்து வாங்க கிளம்பியிருக்கின்றனர். நாளை, 50 லட்சத்துக்கு பதில், 5 கோடி கையெழுத்து வேண்டும் என, கிளம்பினாலும் ஆச்சரியமில்லை. ஆனால் திமுக அரசு இந்த 50 லட்சம் கையெழுத்து வாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும் திமுக நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக புகார்களும் எழுந்தன.
நீட்டை தடுக்க இப்போது பெரிய நாடகத்தை கையில் எடுத்துள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால். தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஏதும் நிறைவேற்ற வில்லை. இதனால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனை திசை திருப்பவே நீட்டை ஒழிக்க மாநாடு, கையெழுத்து இயக்கம் ஆகியவற்றை கையில் ஏந்தியுள்ளது. மேலும், நீட்டை கொண்டு வந்தது, மத்தியில் ஆளும் பாஜக அரசு என்பது போல திமுகவும் அதன் தோழமை கூட்டணி கட்சிகளும் உண்மையை மறைத்து பிரசாரம் செய்கின்றன.
ஆனால், மக்கள் அதை நம்ப போவதில்லை. 'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தான் மத்திய அரசு அமல்படுத்தியது. தமிழகத்திற்கு மட்டும் நீட் விலக்கை உச்ச நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது' என்ற நிதர்சனத்தை, மக்கள் அறிந்து விடாதபடி மறைத்து நாடகமாடுகின்றனர் திமுக அரசு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.முன்னதாக காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக அரசிடம் பேச்சு நடத்தாமல், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டே தீர்வு காண துடித்த திமுக அரசு, தற்போது தமிழ்நாட்டில் மட்டும் நாடகமாடுவது புரோஜனம் இல்லை, நீட் விவகாரத்திலும் அதே உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கலாமே... ஆனால், அங்கு சென்றால், தங்கள் தரப்பு வாதம் எடுபடாது என்பதால், அங்கு செல்லவில்லை.
'நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும்' என கூறும் முன்னாள் மத்திய மைச்சர் சிதம்பரமே, நாட்டின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் தானே. இதே கோரிக்கையை முன் வைத்து உச்ச நீதிமன்றத்தில், அவராவது வழக்கு தொடர்ந்து இருக்கலாமே; அதை ஏன் செய்யவில்லை. செய்தால், அவர்களது அரசியல் சாயம் வெளுத்து போய் விடும் என்று கூறப்படுகிறது. நீட் கையெழுத்து இயக்கத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், அனைத்து மாநிலத்திலும் நீட் தேர்வு வரவேற்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் திமுக அதனை எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது. இதனை வைத்து மனவர்களிடம் குழப்பத்தையும், அரசியலும் செய்துவருவதாக சாடியிருந்தனர்.