24 special

பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்தால் அரண்டுபோய் கிடக்கும் எதிர்கட்சிகள்....!

mk stalin
mk stalin

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பாக பாஜக குறித்து எளிதில் எடை போட வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தது தமிழக அரசியலில் அதிர்வலைகளை உண்டாக்கியது.பிரசாந்த் கிஷோர் சில நாட்களுக்கு முன், 2024 லோக்சபா தேர்தல் குறித்து  இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது 


'இண்டி  கூட்டணியில் வலுவான மாநில கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால், சட்டசபை தேர்தலுக்கும், லோக்சபா தேர்தலுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. சட்டசபை தேர்தல்களில் மாநில உரிமை சார்ந்த விஷயங்கள் முன்னணியில் இருக்கும். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாதம், தேசிய அளவிலான பிரச்சனைகளை பாஜக அணுகும் விதம் ஆகியவை பா.ஜ.,கவுக்கு சாதகமானவையாக மாறும்.இண்டி கூட்டணி மூன்று கூட்டங்களை நடத்தினாலும், பா.ஜக .,வை வீழ்த்த வலுவான கொள்கையை வகுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் எங்குமே பிரச்சாரம் செய்யவில்லை.

மேலும் மோடிக்கு மாற்றாக வலுவான பிரதமர் வேட்பாளர் இல்லை. இது பா.ஜ.கவுக்கு சாதகமான அம்சம். எவ்வளவு தான் பண பலம் இருந்தாலும் மக்கள் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது.எதிரியின் பலத்தை தெரிந்து கொண்டால் தான் அவர்களை வீழ்த்த முடியும். மேற்குவங்கத்தில் பா.ஜ.கவே இல்லை என திரிணமுல் காங்கிரஸ் கூறி வந்தது. ஆனால், 2019 லோக்சபா தேர்தலில் அங்கு மொத்தம் உள்ள, 42 தொகுதிகளில், 18ல் பா.ஜ.கவென்றது.அதுபோல, தமிழகத்தில் பா.ஜ.க இல்லை என்று எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.

பா.ஜ.கவின் வளர்ச்சியை கணிக்க தவறினால் ஒருநாள் அவர்கள் வளர்ந்து நிற்பர்; தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பா.ஜ.கமாறும்.அடுத்த தேர்தலிலேயே பா.ஜ.க வெற்றிபெறும் என்று சொல்லவில்லை. ஆனால், அடுத்த 5 - 10 ஆண்டுகளில் படிப்படியாக ஓட்டு சதவீதத்தை பா.ஜ.க அதிகரிக்கும் என பிரசாந்த் கிஷோர் பேசி இருந்தார்.இந்நிலையில்தான் முதல்வர் குடும்பத்தை சேர்ந்த முக்கியமான நபர் போனில் பிரசாந்த் கிஷோரை தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து பேசி இருக்கிறார் அதற்கு பிரசாந்த் கிஷோர் அண்ணாமலை யாத்திரை நீங்கள் நினைப்பது போல இல்லை களத்தில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.

இனி நீங்கள் அதிமுகவை எதிர் சக்தியாக முன்னிறுத்தி தேர்தலை எதிர் கொண்டால் நஷ்டமே மிஞ்சும் களத்தில் தற்போது பாஜகவே பிரதான கட்சியாக மாறி இருக்கிறது எனவே பாஜகவை எதிர் கொள்ளும் வகையில் வியூகத்தை மாற்றுங்கள் அது தான் இனி தமிழக அரசியல் போக்கை மாற்றும் என தெரிவித்து இருக்கிறார்.அதன் அடிப்படையில் தான் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அதிமுகவை காட்டிலும் அதிகமாக பாஜகவை விமர்சனம் செய்யவும் பாஜகவை எதிர்க்கும் அரசியல் யுத்தியை வகுக்கவும் தயாராகி வருகிறாராம்.

இது நாள் வரை அண்ணாமலை ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனம் செய்த போதிலும் ஸ்டாலின் அண்ணாமலை பெயரை நேரடியாக குறிப்பிட்டு பதில் கூறியது இல்லை ஆனால் வரும் காலங்களில் ஸ்டாலின் அண்ணாமலை பெயரை குறிப்பிட்டு பாஜகவிற்கு பதில் சொல்லும் நிலை உருவாகி இருக்கிறதாம். திமுக நேரடியாக எதிர்க்கும் அளவிற்கு பாஜக தமிழகத்தில் வலுவாக வளர்ந்து இருக்கிறது என்பது தெளிவாக பிரசாந்த் கிஷோர் முதல்வர் குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபரிடம் தெளிவு படுத்தி இருக்கிறாராம்.நீங்கள் அதிமுகவை எதிர்க்கும் வகையில் 2024 தேர்தல் வியூகத்தை வகுத்து தவறு செய்து விட்டீர்கள் இனி பாஜகவை மைய படுத்தி அரசியல் செய்யுங்கள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் தற்போது ஆட்டத்தின் போக்கை முதல்வர் ஸ்டாலின் மாற்றி இருக்கிறாராம்.