திமுக ஆட்சியில் திமுகவினர் பாஜக, அதிமுகவை விமர்சித்து பேசுவது வழக்கம். ஆனால்,இப்போது திமுகவில் உள்ள கவுன்சிலர்கள் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அவரது மருமகனுக்கு எதிராக தர்ணா போராட்டத்தை நடத்தினர்.தமிழக முழுவதும் மாதந்தோறும் நடைபெறும் மாதாந்திர நகரமன்ற கூட்டம், நேற்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர மன்ற கூட்டம் நடக்கும்பொழுது தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
33 வார்டுகளை கொண்ட திண்டிவனம் நகராட்சியில் திமுகவை சேர்ந்த 24 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர மன்ற கூட்டம் சேர்மன் நிர்மலா தலைமையில் கூடியதும் அதிமுக கவுன்சிலர்கள் வெளியேறினர்.தொடர்ந்து 33வது கவுன்சிலர் சீனி சின்னசாமி தலைமையில் 14 திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் செஞ்சிமஸ்தான் மற்றும் அவரது மருமகன் ரிஷ்வானைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சீனி சின்னசாமி பேசுகையில் திண்டிவனம் நகர பகுதியில் ரூ. 9 கோடி வரி வசூல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு முறையான கணக்கு காட்டவில்லை என்று தெரிவித்தனர். நகராட்சிக்கு செய்யும் நல திட்டங்கள் அனைத்திலும், செஞ்சி மஸ்தான் தலையீடும் அவரது மருமகன் தலையீடும் அதிகமாக உள்ளதாக கூறி குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதற்கிடையில் "மக்களுக்கான வேலைகள் ஏதும் முறையாக நடைபெறவில்லை, மாறாக கமிஷன் வசூல் மட்டும் ஜோராக நடைபெறுவதாக கூறினார்கள். எங்கள் அமைச்சரோடு நாங்கள் முரண்பாடு காட்டுகிறோம், அமைச்சர் சொன்ன தான் பணிகள் நடக்கும், மந்திரி சொல்லவேண்டும் என்கிறார்கள்.
சுதந்திரமாக எங்களது பணியை செய்யவேண்டும்" என்று தெரிவித்தனர். இதன் பிறகு ஒரு கவுன்சிலர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சியில் கரப்ஷன், கலெக்ஷன் என்று விமர்சித்தார். ஆனால், இப்போது திமுக ஆட்சியில் தான் கரப்ஷன், கலெக்ஷன், கொலை மிரட்டல் போன்று எல்லாம் அதிகரித்துள்ளது என்றார். எந்த திமுக அமைச்சரும் முதல்வரை மதிப்பதில்லை. திண்டிவனத்தை போல தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைமை உள்ளது என்கிறார்கள்.
ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் அமைச்சர்கள் கட்டுப்பாட்டிலும், மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டிலும் தான் அந்த அந்த மாவட்டங்கள் உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு கேட்டு போய் இருக்கிறது. காவல் நிலையத்திலும் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில்லை என்று திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார்.இந்நிலையில், திமுக கவுன்சிலர்களே அமைச்சர் மீதும் அவரது மருமகன் மீதும் குற்றம் சுமத்தி போராட்டத்தை எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுக ஆட்சியில் கரப்ஷன், கலெக்ஷன் எல்லாம் நடப்பதாக வெளிப்படையாக பேசி குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், அமைச்சர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை கூட பயப்படுகிறார். அமைச்சர் மஸ்தானை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்.ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ மூலமும் அறிக்கை மூலம் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அதிகாரமாக சொல்பவர். இப்போது அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு வந்தாலும் நடவடிக்கை எடுக்க மருத்துவருவது கண்டத்திற்குரிய ஒன்றாகும். திமுக ஆட்சிக்கு வந்த பின் குற்றச்செயலுகளும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பல கட்சி தலைவர்களும் சுட்டி காட்டியுள்ளனர்.
மேலும், நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகவினர் பாஜக நிர்வாகிகள் மீது வனமுறையை வெளிப்படுத்தினர். நேற்று மேட்டுப்பாளையத்திலும் திமுக கவுன்சிலர்கள் அதிமுகவினர் மீது கைகலப்பு ஏற்படுத்தினர். இப்படி தொடர்ச்சியாக திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இதற்கு முதல்வர் பதவி நீக்கம் செய்வாரா? அல்லது வேறு என்ன நடவடிக்கை எடுப்பார் என்று கவுன்சிலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.