
இந்த நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற! அங்கு சென்று இறந்தால் நிச்சயம் உனக்கு முத்தி தான் என்று கூறப்பட்ட புகழ் வாய்ந்த திருத்தலம் காசி! இந்த காசி வட இந்தியாவில் இருந்தாலும் தென்னிந்தியா மக்கள் மத்தியிலும் புகழ்பெற்றது! பெரும்பாலான தென்னிந்திய மக்களும் காசிக்கு சென்று வழிபடுவார்கள் பெருமாளான தமிழர்களின் காசிக்கு சென்று வழிபடுவார்கள். ஒரு வேலை அவர்களால் காசிக்கு செல்ல முடியவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள காசிக்கு நிச்சயமாக சென்று இருப்பார்கள்! அதுதான் தென்காசி, காசியில் இறந்தால் முக்தி என்று கூறுவது ஐதீகம் அதேபோன்று தென்காசியில் பிறந்தாலும் இருந்தாலுமே முத்தி என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் எப்படி உருவானது என்பது பற்றி பலரும் அறிந்திருப்பார்கள் ஆனால் பலரும் தென்காசியில் இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்படிப்பட்ட பல அதிசயங்களையும் மர்மங்களையும் கொண்ட சிவன் கோயிலை பற்றியே இந்த பதிவில் காண போகிறோம்!!
அந்த கோவிலின் பெயர் சாம்பவர் வடகரை அகத்தீஸ்வரர் கோவில். இந்த கோவில் தென்காசி மாவட்டம் சுரண்டை சாலையில் சாம்பவர் வடகரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் உள் நுழையும் பொழுது ஒரு பழமையான படித்துறை அமைந்துள்ளது அந்த படித்துறையை பார்க்கும் பொழுதே தெரியும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது என்பது, அந்த படித்துறைக்கு சாலையில் இருந்து செல்லும் பொழுதும் இடையில் நதி ஒன்று ஓடுகிறது அந்த நதியை ஒட்டியே சாம்பவர் வடகரை அகத்தீஸ்வரர் அமைந்துள்ளார், ஆனால் அந்த நதிக்கு அடுத்த பக்கம் சாம்பவர் வடகரை அகத்தீஸ்வரர்கான கோவில் ஒன்று தற்போது பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது.
தமிழக மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு நதிக்கு இரு பக்கமும் சிவன் அமைந்திருக்கும் திருத்தலத்தை எங்கும் பார்க்க முடியாது ஆனால் இங்கு நதியின் இரு பக்கங்களிலும் சிவன் அமைந்திருக்கிறார், எதற்காக நதிக்கரைக்கு இரு பக்கங்களிலும் இதுபோன்று சிவன் வீற்றிருக்கிறார்! புராணங்கள் என்ன கூறுகிறது என்று பார்த்தால், சாம்பவர் முனிவரும் அகத்திய முனிவரும் இரு லிங்கங்களை இந்த பகுதியில் வைத்து பூஜையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்பொழுது பூஜைக்காக நீர் எடுக்கும் படி அனுமனை வேண்டி உள்ளனர், அனுமனும் இவர்களின் வேண்டுதலை ஏற்று அருகில் இருந்த நதிக்கரையில் இருந்து நீரை எடுத்து வந்து கொடுக்கும் பொழுது இரண்டு முனிவர்களும் ஆழ்ந்த பூஜையில் இருந்துள்ளனர் அதனால் யாரிடம் இந்த தண்ணீரை கொடுப்பது சாம்பவரிடம் கொடுத்தால் அகத்தியர் கோவித்துக் கொள்வார் அகத்தியரிடம் கொடுத்தார் சாம்பவர் கோபித்துக் கொள்வாரே என்று தயங்கிய அனுமன் இருவருக்கும் நடுவில் அந்த நீர் கலசத்தை வைத்தார்.
இதற்கிடையில் அனுமன் நதியிலிருந்து நீரை எடுத்து வரும் பொழுது நதியில் அவரது வால் பட்டு மிக தூரத்தில் இருந்த நதி சாம்பவரும் அகத்தியரும் பூஜை செய்து கொண்டிருந்த இடத்தை அடைந்து சாம்பவரையும் அகத்தியரையும் பிரிக்கும்படி கடைபுறந்து ஓடியது, இதனால் தான் நதிக்கரையின் இரு பக்கத்திலும் சிவபெருமான் எழுந்தருளியதாக கூறுகிறார்கள்.
இன்றளவும் அந்த நதிக்கரை அப்படியே உள்ளது நதிக்கரையில் இரு பக்கத்திலும் சிவபெருமான் கோவில் இருப்பதும் மிகவும் பிரசித்தி பெற்றது. அதுமட்டுமின்றி நதியின் அதிக நீர் ஓடும் பொழுது இந்த நதி கரையிலும் வெல்லம் கரைபுரண்டு ஓடுமாம் அப்பொழுது நதிக்கரையின் வலது புறத்தில் அமைந்திருந்த சிவபெருமான் முற்றிலும் மூழ்கி விடுவாராம் இருந்தாலும் அந்த சமயத்திலும் சிவபெருமானை பூஜிக்காமல் இருந்ததே இல்லை என்று கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்!
மேலும் சிவபெருமானின் தலையில் இருந்து எப்பொழுதுமே நீர் விழுந்து கொண்டு இருக்கும் அதிசயத்தையும் இங்கு காணலாம் என்று கூறுகிறார்கள். அதோடு எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் மனபாரத்தையும் நாம் கொண்டிருக்கும் பொழுதும் இங்கு வந்து சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து சிவனை நோக்கி தியானித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்பது தினமும் மாலை அல்லது காலை சிவனை வணங்கி இங்கு வந்து விளக்கு ஏற்றி வந்தாலும் நாம் நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வட மாநிலங்களில் பனிக்குள் இருக்கும் சிவனை போன்று இங்கிருக்கும் சிவன் நதி நீருக்குள் இருந்து நம் அனைவருக்கும் வேண்டும் வரங்களை கொடுக்கிறார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.....