24 special

500 ஆண்டு கால சபதம்.... இப்படியும் ஒரு இனம்....

ramarkovil, ayothi
ramarkovil, ayothi

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்த தருணம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. அதாவது ஜனவரி 22 ஆம் தேதி அனைத்து இந்துக்களின் எதிர்பார்ப்பாக இருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா உடன் திறக்க உள்ளது. இதற்காவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விமானம் மூலமாக அயோத்தி மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது, அதுமட்டுமின்றி ராமர் கோவிலில் ஸ்ரீராமகுண்டம் மகரிஷி வால்மீகி ஆராய்ச்சி மையம் அனுமன் மண்டபம் என ஐந்து மண்டபங்களையும் மொத்தமாக 70 ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ளது. மேலும் மூலவர் சன்னதியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகவும் இந்த கருவறை முழுவதுமே ராஜஸ்தான் மார்பில்களால் கட்டப்பட்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 


கடந்த 2019ல் தொடங்கப்பட்ட இந்த கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 2019-ம் ஆண்டு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் தினமும் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் பேருக்கு அம்மாவார் ராம் மந்திர் என்ற இடத்தில் தாராளமான அன்னதானங்கள் வழங்கப்பட்ட வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதோடு ராமஜென்ம பூமி ட்ரஸ்டி மூலமாகவும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தினமும் இக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பேர் வரவுள்ளாதால் இலட்சக்கணக்கான வாகனங்கள் இனிவரும் என்பதாலும் மல்டி வாகன பார்க்கிங் சிஸ்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக இந்த மல்டி லெவல் வாகன பார்க்கையில் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் அயோத்திக்கு வரலாம் என்றும் அதற்கு விமானம் ஒரு வழியாகவும் உள்ளது ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

இப்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு அதன் கட்டுமான பணிகள் தொடங்கும் நாள் முதல் இருந்து பல பரிசுப் பொருட்கள் உலகெங்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறதாம் அதன்படி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அதிகமான பரிசு பொருட்களும் வெள்ளியால் செய்யப்பட்ட செருப்பு நகைகள் விலை உயர்ந்த பல விதமான பொருட்கள் மற்றும் ஆடைகள் பல வகைகள் அனைத்தும் சீர்வரிசையாக அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் தங்கம் வைரம் என்ற விலை உயர்ந்த பரிசு பொருட்களும் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட வில் அம்பு சிறிய அளவு முதல் பெரிய அளவு வரையிலான ராமர் சிலைகளும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

மேலும் அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழாவை 55 நாடுகளில் கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது இதனை அடுத்து தற்பொழுது, கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த ஒரு சபதத்தை ஒரு இனமே தற்பொழுது நிறைவேறிய மகிழ்ச்சியில் அதனைக் கொண்டாட போகின்றனர். அதாவது ராமரை தங்களது முன்னோராக கூறிவரும் சூரியவன்ஷி சத்ரிய சமூகத்தினர் 500 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய படையெடுப்பால் ராமர் கோவில் தகர்க்கப்பட்டதாலும் மீண்டும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் போதே நாங்கள் தலைப்பாகை மற்றும் தோல் காலணிகளை அணிவோம் என்றும் அக்காலத்தில் எடுத்த சபதத்தை 500 ஆண்டுகளாக கடைபிடித்து தற்பொழுது ஜனவரி 22ஆம் தேதி அன்று அவர்களது சபதத்தை நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் 500 ஆண்டுகால சபதம் நிறைவேற உள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர், இது குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.