24 special

தமிழ் நடிகர்கெல்லாம் தோன்றாதது.... ராமர் கோவில் பற்றி சிரஞ்சீவி சொன்ன அந்த வார்த்தை...!

chiranjeevi, ramar kovil
chiranjeevi, ramar kovil

2019 பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய பிறகு கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்கான அழைப்பிதழ்களும் நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பம்சங்களான சில தகவல்கள் வெளியாகி உள்ளது அதில் நாகர் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவில் மூன்று தளங்களை கொண்டதாகவும் இந்த மூன்று தலங்களில் மூன்றாவது தளம் தற்பொழுது கட்டுமான பணியிலும் முதல் தளத்தில் தான் ஸ்ரீராம் தர்பாரும் கோயில் பிரதான கருவறையும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கே ராமர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் நித்திய மண்டபம்,  ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்கள் இங்கு கட்டப்பட்டுள்ளது! அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் நான்கு மூலைகளிலும் சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கும் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வடக்கு பகுதியில் அன்னபூரணி ஆலயமும் தெற்கு பகுதியில் அனுமான் ஆலயமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது ராமர் கோவிலின் கட்டுமானத்தில் எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்றும் கோவிலில் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர் காம்பாக்ட் செய்யப்பட்ட கான்கிரீட் அடுக்குகளுடன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 25,000 பேர் தங்குவதற்கான யாத்ரீகர்கள் தங்கம் வசதியின் மையம் கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நெருங்கி வரும் நிலையில் இப்படி நாளுக்கு நாள் அதன் சிறப்பு அம்சங்களும் அதிக அளவில் வெளிவந்து இந்திய நாட்டை தாண்டி உலகம் முழுவதும் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு முன்னதாகவே ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் புனித நீர்கள் நாடெங்கும் இருக்கும் புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டதை அடுத்து ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் புனித நீர் எடுக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது மேலும் திருப்பதியில் இருந்து அயோத்திக்கு ஆயிரம் லட்டுகள் அனுப்பி வைக்கப்பட்ட தகவலும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதோடு 64 வயதான வருமானவரித் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு தங்க பாதுகைகளை எடுத்து கொண்டு பாதயாத்திரை மூலம் வந்து கொண்டிருக்கும் செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் மற்றுமொரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகி உள்ள அனுமன் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் எனக்கு வந்துள்ளது! மேலும் இந்த திரைப்படத்தில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட் இருந்தும் ஐந்து ரூபாயை ராமர் கோவிலுக்காக வழங்க முடிவு செய்துள்ளது இந்த படக்குழு திரைப்படத்தின் சார்பாக இச்செய்தியை நான் அறிவிக்கிறேன் என்றும் அனுமன் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்டில் தெரிவித்தார். இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள எந்த ஒரு நடிகர்களுக்கும் திரைப்பட குழுவிற்கும் தோன்றாதது அனுமன் பட குழுவிற்கும் சிரஞ்சீவிக்கும் தோன்றியுள்ளது என்று விமர்சனங்கள் இணையங்களில் உலா வருகிறது.