தமிழகத்தில் போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பது போல் அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய போது காலத்திற்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று எனது ஆட்சியில் நிறைவேற்றி தருகிறோம் என கூறினார். அடுத்ததாக தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று வந்ததில் இருந்து போக்குவரத்துஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள் ஆனால், அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் கடந்த 3ம் தேதி போக்குவரத்துஊழியர்கள் வரும் 9ம் தேதி முதல் 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஸ்ட்ரைக் நடத்த போவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதாவது பொங்கல் பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் பேருந்துகள் இயங்காமல் இருப்பதால் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது. நேற்று அமைசர் சுவாசங்கர் உடன் போக்குவரத்துதொழிற்சங்க உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமுக உடன்பாடு எட்டாத காரணத்தால் நேற்று மாலை முதலே தமிழகத்தில் போக்குவரத்து செயல்படாமல் ஸ்ட்ரைக்கில் இருந்தனர். இதனால் நேற்று மாலை முதல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தொடர்ந்து பல மாவட்டத்திலும் பேருந்து சேவைகள் முடங்கின.
இதற்கிடையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து ஊழியர்கள் இல்லை என்றாலும் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து இயக்குவதாக அறிவித்தார். மேலும், பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இன்று பேருந்துகளுக்கு தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்க முடிவெடுத்தனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கியதால் முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதே போல் கன்னியகுமாரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் விபத்து நடந்து வருவதை குற்றம்சாட்டி வருகின்றனர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
போக்குவரத்துக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ஊழல் செய்தார். அந்த தொகையை எல்லாம் ஊழியர்களுக்கு கொடுத்திருந்தால் இன்றைக்கு ஸ்ட்ரைக் என்ற பேச்சுக்கு இடமிருக்காது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. தற்போது செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள அமைச்சர் சிவசங்கரும் போக்குவரத்துக்கு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மட்டுமே கூறுகின்றனர். ஆனால், அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏற்க்கனவே திமுக ஆட்சி மீது மக்கள் பெரிய பிரியத்தில் உள்ளனர். இப்போது மீண்டும் இதே நிலை பொங்கல் வரை சென்றால் திமுக ஆட்சிக்கு பெரிய பரிசு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு நாளை காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் போராட்டம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.