24 special

என்னது திருச்சியில் இப்படி ஒரு முருகன் கோவிலா!!

murugan temple
murugan temple

தமிழ்நாட்டில் பல அற்புதங்கள் நிறைந்த பழமையான கோவில்கள் பல அமைந்துள்ளது. அவற்றில் சில தினம்தோறும் மக்கள் சேர்ந்து வழிபட்டு வரும் தளங்களாக மாறி மிகவும் புகழ்பெற்ற கோயில்களாக இருந்து வருகிறது. மேலும் சில கோவில்கள் அற்புதங்கள் நிறைந்திருந்தாலும் கூட வெளியில் அதிக அளவில் மக்களுக்கு தெரியாத கோவில்களாகவும், உள்ளூரில் இருக்கும் மக்களே அதிக அளவில் செல்லாத கோவிலாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலிமலையில் அமைந்துள்ள முருகன் கோவில் பற்றி நம் அனைவருக்குமே அதிக அளவில் தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.


இந்த விராலி மலையானது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வடமேற்கு பகுதியில் 41 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் திருச்சியில் உள்ளவர்களுக்கு தெற்கே 31 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. மதுரையில் இருந்து 107 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவிலுக்கு செல்ல முடியும். பெரும்பாலும் முருகப்பெருமானை வழிபடுபவர்கள் அறுபடை வீடுகளில் உள்ள ஆறு கோவில்களுக்கு மட்டுமே அதிக அளவில் சென்று வழிபட்டு வருவார்கள். இந்த நிலையில் இந்த அறுபடை வீடுகளில் உள்ள கோவில்கள் அனைத்துமே மிகவும் பெயர் பெற்ற கோவிலாக இருப்பதால் எப்போது பார்த்தாலும் கூட்டம் அதிக அளவில் வந்த வண்ணமே இருக்கும். 

ஆனால் தமிழ்நாட்டில் முருகனுக்காக அறுபடை வீடுகளில்  உள்ள கோவில்கள் மட்டுமல்லாமல் மற்ற சில கோவில்களும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கோவில்கள் குறித்த செய்திகள் எதுவும் அதிக அளவில் மக்களுக்கு தெரியாத காரணத்தினால் யாரும் இந்த கோவிலுக்கு தேடி செல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் விராலி மலையில் அமைந்திருக்கும் முருகப்பெருமாள் கோவிலானது மிகவும் பழமையானதும் சக்தி வாய்ந்த கோவிலுமாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் முருகப்பெருமான் சண்முகநாதன் ஆகவும் அவர்கள் சேர்ந்து வள்ளி தெய்வானையும் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். 

கோவிலானது 2000 ஆண்டுகளுக்கு பழமையானது என்று கூறப்பட்டு வருகிறது. கோவிலானது மலையின் மேல் அமைந்திருக்கும் காரணத்தினால் முருகப் பெருமானின் விருப்பமான வாகனம் என்று கூறப்படும் மயில் எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பல துன்பங்கள் எதிர்கொண்டு வருபவர்களும், கல்வி, செல்வம் மற்றும் ஆயுள் போன்றவை நீடிப்பதற்காகவும் இங்கு உள்ள முருகப்பெருமானை அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் எல்லோருக்குமே தெரிந்த இந்த கோவிலில் அருகில் மற்றொரு கோவில் அமைந்துள்ளது. ஆனால் அது அதிக அளவில் மக்களுக்கு தெரியாத ஒரு கோவிலாக இருந்து வருகிறது. தற்போது அந்த கோவில் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

அந்த வீடியோவில் முருகனுக்கு நெய் வைத்தியமாக சுருட்டை படைக்கும் அற்புதமான கோவில் திருச்சிக்கு அருகில் அமைந்திருக்கிறது என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த கோவிலின் அமைப்பானது மஞ்சுமெல்பாய்ஸ் திரைப்படத்தில் வரும் குகை போலவே அமைப்பை கொண்டிருப்பதாகவும் அதற்குள் செல்லும் பொழுது முட்டி போட்டுக் கொண்டுதான் செல்ல முடியும் என்று கூறியுள்ளார். இந்த நுழைவாயிலை கடந்து செல்லும் பொழுது ஒரு சிவலிங்கம் தியான பீடமும் அமைந்துள்ளது. அதனை தாண்டி மலை குகைக்குள் குனிந்து சென்று கொண்டிருக்கும் பொழுது முருகன் அமைந்திருக்கும் இடத்தை அடைய முடிகிறது.

இங்கு அமைந்திருக்கும் முருகன் ஆறு முருகன் ஆக காட்சியளிப்பு வருகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த மர்மம் நிறைந்த கோவிலானது விராலிமலையின் மெயின் கோவிலுக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய கேட் வழியாக செல்ல முடியும் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த கோவிலுக்கு இதுவரை சென்று வரும் பலருக்கும் அப்படி ஒரு கோவில் உள்ளது என்றே தெரியாத அளவிற்கு இந்த கோவில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோவிலுக்கு தற்பொழுது பலரும் சென்று வருகின்றனர்.