24 special

கல்கி திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் கோவிலுக்கு இப்படி ஒரு பின்னணியா?!

kalki
kalki

சமீபத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் கமலஹாசன் ஆகியோர்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படமான கல்கி கிபி 2898 என்ற திரைப்படத்தில் காட்டப்பட்ட கோவில் ஒன்று தற்பொழுது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. மேலும் இந்த கோவில் ஆனது மிகவும் பழமையானது என்றும் சோழர்கள் கட்டுமான கலையை கொண்டுள்ளதாகவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக இருக்கும் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இத்தகைய பழமை வாய்ந்த கோவிலானது எங்கு உள்ளது என்று பார்த்தால் ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பெருமாள்ளபாடு என்ற இடத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. 


இந்த கோவிலானது சில ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணில் புதைந்து காணப்பட்டதாகவும் தற்போதும் அதே நிலையில் தான் இருந்து வருகிறது என்றும் சுற்றி உள்ளவர்கள் கூறி வருகின்றனர். பெருமாள்ளபாடு ஊரில் பெண்ணாறு என்ற ஒன்று உள்ளது. அதன் கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவிலின் கோபுரம் ஒன்று மிகவும் பழமையான தோற்றத்துடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மண்ணுக்குள் புதைந்து கிடப்பது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அக்கோவில் பற்றி விசாரிக்கும் பொழுது இத்தகைய பழமை வாய்ந்த கோவில் சிவன் கோவில் என்பதும், இங்கு நாகலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. 

ஆனால் இந்த கோவில் குறித்து எந்தவித வரலாற்று சான்றிதழ்களும் இன்னும் கிடைக்காத காரணத்தினால் இது சரியாக எந்த காலத்தில் கட்டப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த கோவிலின் அமைப்பை பார்க்கும் பொழுது இது சோழர்கள் கட்டிய கோவில் என்பது மட்டும் தெரிய வருகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்த கோவிலானது மண்ணுக்குள் புதைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் இந்த கோவில் குறித்து அந்த ஊரில் உள்ளவர்களிடம் விசாரிக்கும் பொழுது ஊருக்குள் வயதானவர்கள் சிறுவயதில் இருக்கும் பொழுது இருந்தே இந்த கோவில் மண்ணுக்குள் புதைந்து இருந்ததாகவும் அப்போதே வெறும் கோபுரம் மட்டும்தான் தெரிந்ததாகவும், நாளடைவில் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்து எங்கே இருந்தது என்று அடையாளமே தெரியாமல் போய்விட்டதாகவும் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து இக்கோவில் குறைத்த கதைகளை ஊர் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட சில இளைஞர்கள் அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வந்த நிலையில் அந்த கோவிலில் கோபுரம் வெளியில் தெரிந்துள்ளது. 

வினைத்தொடர்ந்து இந்த கோவிலை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று ஊர் மக்களும், அந்த ஊரின் தலைவரும் விரும்புவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த கோவிலை இதே இடத்தில் புதுப்பித்துக் கட்டுவதால் மக்களுக்கு வசதியாக இருக்காது என்றும், இந்த இடமானது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் கோவிலினை கிராமத்திற்கு அருகிலேயே கட்டினால் நன்றாக இருக்கும் என்று கருதுகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவில் கட்டுவதற்கான இடமும், நிதியும் கிடைத்தவுடன் கோவிலை கட்டுவதற்கு தயாராக இருப்பதாக ஒரு மக்கள் கூறியுள்ளனர். 

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் அமைந்திருக்கும் காட்சி ஒன்றில் இந்த கோவில் இடம் பெற்றுள்ளதாக தொடர்ந்து புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் தொடர்ந்து உள்ளூர் வாசி முதல் பல்வேறு இடங்களில் இருந்து இந்த இடத்தை பார்ப்பதற்காக தொடர்ந்து மக்கள் கூட்டம் வந்த வண்ணமே இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கு தொடர்ந்து பல youtubeர்களும் வந்து வீடியோக்களை எடுத்து இந்த இடத்தினை மிகவும் ட்ரண்டாக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விரைவில் இந்த கோவிலின் நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருவதோடு தற்பொழுது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.