24 special

இனிமே இது நடக்காது... ஆவேசமடைந்த அமித்ஷா....! மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை...

amitsha
amitsha

முன்பெல்லாம் குடும்பத்தின் தலைவர்களாக உள்ள ஆண்கள் மற்றும் இளம் வயதில் உள்ள ஆண் பிள்ளைகள் கூட குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உடல்நிலை பாதிப்பை சந்தித்து இருப்பார்கள். ஒரு வீட்டில் தந்தை குடிக்கு அடிமையாகி இருக்கிறார் என்றால் அவரைப் பார்த்து வெறுப்படைந்து அந்த வீட்டில் இருக்கும் மகன் குடிப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து இருப்பார். ஆனால் அதுவே நேர்மறையாகவும் நடந்திருக்கிறது. குடிப்பழக்கம் ஒரு வீட்டில் அமைதியையும் சுமூக நிலையையும் குறைகிறது இதனால் அந்த வீடு நிம்மதியாக வந்து உறங்கும் சொர்க்கமாக மாறாமல் வீட்டிற்கு செல்ல வேண்டுமா என்று நரகத்தைப் போன்ற அனுபவத்தை அந்த வீட்டில் வசிக்கும் மற்ற பெண் பிள்ளைகள் மட்டும் தாயாருக்கு ஏற்படுத்தும். இது இன்னும் சில பகுதிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது அதுவும் தமிழகத்தில் தமிழக அரசே மதுவை விற்பதால் இந்த நிலை அதிகமாக காணப்படுகிறது விதவைகளின் எண்ணிக்கையும் மதுவால் இறக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. இவற்றிற்கு ஒரு விடிவு காலம் கிடைக்காதா என்று மக்களின் நாள்தோறும் நினைத்து ஒவ்வொரு ஆட்சியையும் ஏற்கத்துடன் பார்த்து வருகிறார்கள் ஆனால் நாளுக்கு நாள் குடிப்பழக்கம் அதிகமாகி அதிகமாகி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுவிட்டது. 


அதுதான் போதை பழக்கம்! இவை ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலுமே ஆங்காங்கே காணப்படுகிறது. இவற்றிற்கு இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட பழக்கம் ஏற்படுத்தி அதற்கு அடிமையாகி வருகிறார்கள் இவற்றில் ஆண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா என்று கேட்டால் இல்லை, தற்போது பெண்களும் இதற்கு தன்னை அறியாமலேயே அடிமையாக்கப்படுகிறார்கள். சிலரோ இதனைத் தெரிந்து இதில் விழுகிறார்கள்! சமீபத்தில் கூட டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதை பொருள் அதனை தொடர்ந்து தமிழகத்தில் அந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் தமிழகத்தில் ஆளும் அரசின் நிர்வாகியாக இருந்ததும் அவர் கைது செய்யப்பட்டதும் செய்திகளின் பரபரப்பாக வெளியானது இதனை அடுத்து அவரை கைது செய்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளில் போதை கடத்தல் அம்பலமாக்கப்பட்டது. 

மேலும் சமூக வலைதளங்களில் நாட்டின் பல பகுதிகளில் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் போதை பெருளுக்கு அடிமையாகி விற்க கூட முடியாமல் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தியா ஒரு கிராம் போதைப்பொருளை கூட நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்து பேசியுள்ளார். அதாவது கடந்த 18ஆம் தேதி  டெல்லியில் நடைபெற்ற என் சி ஓ ஆர் டி யின் ஏழாவது உச்சி நிலை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, போதைப்பொருள் வர்த்தகமானது போதைப்பொருள் பயங்கரவாதத்துடன் சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் இவை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுகிறது. 

இந்தியாவில் விரிவான சீர்திருத்தங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து போராடுவதற்காக பிரதம நரேந்திர மோடி அரசால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். மேலும் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க அனைத்து விதமான முயற்சிகளை சீராக எடுக்க அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார். மேலும், போதை பொருள் நடமாட்டம் கடத்தல் குறித்து நாட்டின் குடிமக்கள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு புகார் அளிப்பதற்காக 1933 என்ற ஹெல்ப்லைன் நம்பரை மின்னஞ்சல் ஐடியையும் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். 

மேலும் அமித்ஷா இந்த போதை பொருள் நடமாட்டத்தை குறிப்பாக தென்னிந்தியாவை அதிகம் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சில தகவல்கள் கசிகின்றன...இது மக்களிடையே நல்ல வரவேற்பை கண்டு வருகிறது அது மட்டும் இன்றி நாட்டின் வளர்ச்சிக்காக மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துமே வெற்றிப்பாதையில் செல்கிறது அந்த வரிசையில் தற்போது போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் நிச்சயம் வெற்றி அடையும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.