24 special

தோல்வி பயத்தால் தலைதெரித்து ஓடும் ஆ ராசா ,திருமாவளவன்

A rasa, thirumavalavan
A rasa, thirumavalavan

தோல்வி பயத்தால் தலைதெரித்து ஓடும் ஆ ராசா ,திருமாவளவன்


தோல்வி பயத்தால் ஆ ராசா, திருமாவளவன் தங்கள் தொகுதிகளை விட்டு ஓடுகிறார்கள்!நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் திமுக எம்.பி ஆ ராசா.

இவர் பதினைந்தாவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலை தொடர்புதுறை அமைச்சராக கடந்த 2010 நவம்பர் 16 நாள் வரை பொறுப்பு வகித்தார்.பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில் திராவிட

முன்னேற்றக் கழகம் சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட ஆ ராசாமுக்கியமாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன் கடந்த 2019 ஆம்ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் தலைமையிலான

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பர மக்களவைத்தொகுதியில் போட்டியிட்டார். அதில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட  3219 வாக்கு வித்தியாசத்தில் 5,00,229 வாக்குகள் பெற்றுவெற்றி பெற்றவர்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாதகாரணத்தினால் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்சமயம் ராகுலின் காங்கிரஸ் எம்பி பதவி பறிக்கப்பட்டதாலும், எட்டுஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் தற்போதுஎதிர்க்கட்சிகள் வலுவில்லாமல் இருந்து வருகின்றன. ஏற்கனவே தாங்கள் எம்பிஆக இருக்கும் தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதாலும்,

கடந்த முறை ஜெயித்து தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என மக்கள் கேட்டு இந்தமுறை ஜெயிக்க வைக்க மாட்டார்கள் என்ற பயத்தாலும் திருமாவளவன் சிதம்பரம்தொகுதியில் இருந்து திருவள்ளூர் தொகுதிக்கும், ஆ ராசா நீலகிரி தொகுதியில்இருந்து மாறுவதாக தெரிய வருகிறது.

இது குறித்து திருமாவளவன் தன் சகாக்களிடம், 'ஏற்கனவே இரண்டு முறைசிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று விட்டதாகவும், அத்தொகுதியைத் தாண்டி தானும் தன் கட்சியும் காலூன்ற வேண்டும் என்பதற்காக தொகுதி மாறுவதாகவும்,

லோக்சபா தேர்தலில் திருவள்ளுவர் தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், கடந்த லோக்சபா தேர்தலில்சிதம்பர தொகுதியில்  திருமாவளவனும், விழுப்புரத்தில்  அவரது கட்சிபொதுச்செயலாளர் ரவி குமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். விழுப்புரம்மற்றும் சிதம்பரம் அருகே உள்ள தொகுதிகள் என்பதால் இருவரும் எம்பி ஆகஇருந்து வட மாவட்டங்களில் கட்சியை வலுவாக கட்டமைக்க முடியவில்லை என திருமாவளவன் கருதுகிறார் என்றும் விசிக தரப்பில் இருந்து தகவல்கள்கிடைத்துள்ளன.

இதேபோல் நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக சார்பில்போட்டியிட வாய்ப்பு இருப்பதால், அந்த தொகுதியை விட்டு வெளியேறுவதாகமுடிவெடுத்துவிட்டார் திமுக எம்.பி ஆ.ராசா, அவர் சொந்த தொகுதியானபெரம்பலூர், பொது தொகுதி என்பதால் தன் மகன் அருணை நிறுத்த அமைச்சர்

கே.என்.நேரு முயற்சிக்கிறார். அதனால் சிதம்பரம் தொகுதியை ஆ ராசா குறிவைக்கிறார் எனவும், திருமாவளவன் தொகுதி மாறுவதால் சிதம்பரத்தைகைப்பற்றுவதில் ராசாவுக்கு சிரமம் இருக்காது என கூறப்படுகிறது.

தற்போது வரவிருக்கும் தேர்தல்களில் தோல்வி நிச்சயம் என இந்த இருஎம்பிக்களும் தொகுதி மாற முடிவு செய்திருப்பதால், பிற எம்பிக்கள் போட்டியிடலாமா வேண்டாமா என யோசித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல்வரும் தேர்தலில் இப்படி தொகுதி மாறுவதால் எதையாவது செய்து வெற்றி பெறலாம் என்ற கணக்கில் இந்த இருவரும் இருப்பதாகவும், ஏற்கனவே போட்டியிட்டதொகுதியில் போட்டியிட்டால் கண்டிப்பாக தோல்வி நிச்சயம் என முடிவு செய்துஇப்படி இருவருமே தொகுதி மாற திட்டமிட்டுள்ளார்கள் என தெரிகிறது. ஆனால்அறிவாலயத்தின் கணக்கோ வேறு மாதிரியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,