24 special

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக..! உஷார் ஆன தமிழக மக்கள்

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக..! உஷார் ஆன தமிழக மக்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் ஒன்றில் டாஸ்மாக் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார் அதில் டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.


மேலும் திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாறலாம் என்று வெளியான அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டாஸ்மாக் மீம்ஸ்கள் வைரலாக தொடங்கின அதில் ஒன்றாக கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து டாஸ்மாக் மீம்ஸ் செய்தது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

நேற்று மதுபானம் சாப்டதாகவும், தலை வழிப்பதாகவும் குறிப்பிட்டு தொடங்கும் வீடியோவில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு என்ன அர்த்தம் என கணவர் சொல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகிறது, இந்த வீடியோவை பார்த்த உடன் பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.

ஊரில் உள்ள நபர்கள் எல்லாரும் கிண்டல் செய்யும் நிலைக்கு அரசு நிர்வாகமும், அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனமும் வந்து இருப்பதாகவும் உடன் பிறப்புகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக்கை மூடுவோம் என கடந்த காலங்களில் வாக்குறுதி கொடுத்த  திமுக, தற்போதைய ஆட்சி காலத்தில் டாஸ்மாக் உற்பத்திக்கு இலக்கு வைத்து வேலை செய்வதாக பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சுமத்தும் சூழலில் சமூக வலைத்தளங்களில் சாமானிய மக்களும் கிண்டல் செய்யும் நிலைக்கு டாஸ்மாக் வந்து இருப்பது திமுக ஆட்சிக்கு மக்கள் மனதில் என்ன மதிப்பெண் உள்ளது என்பதை தெளிவு படுத்துவதாகவே உள்ளது.