24 special

அர்ஜுன் சம்பத் கேட்ட ஒரே கேள்வியில் அடங்கி போன கனிமொழி

Kanimozhi,arjun sampath
Kanimozhi,arjun sampath

அர்ஜுன் சம்பத் கேட்ட ஒரே கேள்வியில் அடங்கி போன கனிமொழி



கனிமொழிக் கூறிய அந்த வார்த்தை ஒரே அடியாக அர்ஜுன் சம்பத் கொடுத்த பதிலடி!தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதன் சாதனை விளக்க கூட்டம் பல மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது. அதன்படி தூத்துக்குடி அண்ணா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக

தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்பி கனிமொழியும் கலந்து கொண்டுபேசினார். திமுக மேற்கொண்ட புதிய திட்டங்களின் பெருமைகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்த கனிமொழி திடீரென ஆளுநர் பக்கம் தனது பேச்சை மாற்றினார். அதற்கு முன் ஆளுநர் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை மேலும் இது ஒரே நாடு ஒரே

பாரதம் இன்று கொள்கைக்கு எதிரானது என்றும் திமுகவை சாடி இருந்தார். அந்த ஆளுநரின் திராவிட மாடல் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகத்தான் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்பி கனிமொழி, ஆளுநருக்கு பதில் கூறுவது போல திராவிடம் மாடல் என்பது காலாவதியானது அல்ல அவருடைய பதவி தான் காலாவதி ஆகி உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி செய்திருந்த போது

மேற்கொள்ளப்பட்ட அரசின் மிச்சம் எச்சம் தான் ஆளுநர் பதவி ஆதலால் அதனையும் தற்போது தூக்கி எறிய வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார்.திமுக எம்பி கனிமொழியின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாகஅர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுகவினர்

எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்களது சட்டைகளை கிழித்துக்கொண்டு ஆளுநர் மாளிகைக்கு ஓடிச் சென்று மனு அளித்த போது இருந்த அதே ஆளுநர் தான் தற்போதும் உள்ளார் அப்போது தெரியவில்லையா?  என்று கேள்வி எழுப்பிய அர்ஜுன் சம்பத் மேலும் இப்படியே ஆளுநரை அவமதித்து பேசிக் கொண்டிருந்தால் அரசியல் சாசனத்தை அவமதித்தது போன்ற குற்றம் மற்றும்  நாலாந்தர பேச்சாளரை

விட்டு திட்டுவதே திமுகவினரின் ஸ்ரடஜியாக ஆக உள்ளது மேலும் இப்படி முரணாக பேசுபவர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.தூத்துக்குடி பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் படுவேகமாக ஆளுநர் மீது சரமாரியாக விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டிருந்த கனிமொழி அர்ஜுன்

சம்பத் முன்பு எதிர்கட்சியாக இருந்த பொழுது சட்டையை கிழித்துக்கொண்டு மனு கொடுத்த போது அது தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியதும் அதன்பிறகு எதுவும் பேசாமல் கப்சிப் என்று இருந்துள்ளார். தனிமனிதனாக தனது கருத்தை முன் வைத்திருந்த ஆளுநர் மீது எம்பி கனிமொழி அரசை ஆளும் ஆளுநர் என்றும்கருதாமல் அவரது பதவிக்கு தான் காலாவதி நிலை ஏற்பட்டுள்ளது பிரிட்டிஷ்

அரசின் மிச்சம் எச்சமே  ஆளுநர் பதவி என்றும் அரசியலமைப்பையே கண்டிக்கும் வகையில் கனிமொழி பேசி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கு பதிலடியாக அர்ஜுன் சம்பத் கேட்ட கேள்விக்கு பிறகு கனிமொழி எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருந்து வருவதன் பின்னணி பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.


ஏற்கனவே அண்ணாமலை பி டி ஆரின் ஆடியோ பதிவை குறித்து அதனை தணிக்க செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மற்றும்,அதுமட்டுமல்லாமல் சவுக்கு சங்கர் தனது தனிப்பட்ட தரப்பில் திமுக மேற்கொண்டிருந்த ஊழலை புகாராக அளித்துள்ளார் மேலும் புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமியும் சட்டவிரோதமாக பல இடங்களில் மதுக்கள் நடைபெற்று

ஊழல் நடைபெறுவதாகவும் அதைப்பற்றி விரைவில் விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார் இப்படி தொடர்ச்சியாக திமுகவிற்கு எதிராக பல புகார்கள் ஆளுநரிடம் வந்திருக்கின்ற நிலையில் அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் கனிமொழி ஆளுநரை விமர்சித்திருப்பது திமுகவிற்கு ஆபத்தாக முடியும் என்ற தகவல் கனிமொழிக்கு கிடைத்ததால் ஆளுநரை பற்றி இனிபேசுவது கூடாது என முடிவெடுத்ததாகவும் அதன் காரணமாகத்தான் அர்ஜுன் சம்பத்பேசியதற்கு கப்சிப் ஆனதாக தகவல்கள் கிடைத்துள்ளன.