கனிமொழி திமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியை குறிவைத்து கனிமொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் களமிறங்கி வேலை பார்த்து வருகின்றனர்!
இந்த நிலையில் மறுபுறம் தேசிய கட்சி கூட்டணியில் நமக்கு எந்த ஒரு வாய்ப்புகளும் பலனும் இல்லை என்பதை உணர்ந்த முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள தொகுதிகளையாவது தம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு தொகுதிகளிலும் யார் யாரை போட்டியிட வைக்கலாம்! வேட்பாளராக தேர்ந்தெடுக்கலாம்! எந்த கட்சியை நிறுத்தலாம்! எந்த கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கலாம் என்று கடுமையாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது, அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் கனிமொழியை தூத்துக்குடி தொகுதியில் நிறுத்தலாம் என்று திமுக தரப்பில் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கனிமொழி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற மொத்த குழுவினரும் இறங்கி அடுத்த ஆண்டு வரப்போகும் தேர்தலுக்கு இப்பொழுதே கடுமையாக கள வேலைகளை செய்து வருகின்றனர்!
இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி தன் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று அந்த தொகுதி மக்கள் ஆதங்கத்தில் கொந்தளித்துள்ளனர். உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ள குடிநீருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மக்கள் ஒவ்வொரு நாளும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதரவாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் நீர் வரத்து தற்போது நின்று போனதாலும், மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தண்ணீர் வரத்து குறைவாக வளர்வதாலும் சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தண்ணீர் எடுக்க இருக்கும் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த கிணறுகளில் நீர் வரத்தை அதிகரிக்க வடக்கு ஓரத்தில் ஓடுவதை தென் பகுதிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழ்வார் தோப்பு பகுதியில் அணைக்கட்டுவதற்கான பணிகளும் தற்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தின் பணிகளை முடித்து தமிழக அரசு அதனை திறக்கும் என்றும் இப்பகுதி ஆய்வு செய்த பொன்னன் குறிச்சி ஆற்றுப்பகுதியின் ஆட்சியர் கி. செந்தில்ராஜ் கூறியுள்ளார். அதோடு முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளும் விரைவில் தீர்க்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறை தடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் எப்பொழுது இந்த குறைகள் தீர்க்கப்பட்டு நாங்கள் குடிநீருக்காக வெகு தூரம் நடந்து செல்வது குறையும் தடுக்கப்படும் என்று கேள்வி எழுப்பும் அப்பகுதி மக்கள் அத்தொகுதியின் எம்பி' யான கனிமொழி மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வரும் தேர்தல்களில் கனிமொழிக்கு வாக்களிப்பதாக இல்லை என்றும், கனிமொழி தேர்தலில் போட்டியிடும் பிரச்சாரத்திற்கு வரட்டும் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் எனவும் மக்கள் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே கனிமொழிக்கு அவர் சார்ந்த ஊழல் வழக்கு வேறு விசாரணைக்கு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இப்படி தொகுதி மக்கள் வேறு போர்க்கொடி தூக்கியிருப்பதால் கடும் அதிர்ச்சியில் உள்ளார்! தொகுதி மாறினாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளாகுமே என கனிமொழி தரப்பு கவலையில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன!