சமீப காலமாக வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விக்கு அற்புதமாக பொருந்தி வருபவர் நடிகர் விஜய், ஏனென்றால் அவரது மக்கள் இயக்கம் அரசியல் ரீதியான பல நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது இருப்பினும் அரசியலில் நான் இறங்க உள்ளேன் என்பது குறித்த அதிகாரப்பூர் தகவலை விஜய் வெளியிடவில்லை எனினும் தனது மக்கள் இயக்கத்தை 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களுக்கு தயார் படுத்தி வருகிறார். அதாவது முக்கிய தேசிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் அன்று அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விதமாகவும் பொது தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியும், இரவு நேர பாடசாலை ஏழை எளிய மக்களின் கல்விக்கு உதவுவது என்பது போன்ற பல நடவடிக்கைகள் விஜயின் மக்கள் இயக்கத்தால் சமீப காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இவை அனைத்தையும் விஜய் தனது இயக்க நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் மூலம் தெரிவித்து ஈடுபட வைத்து வருகிறார் என்றும் கூறப்பட்ட வருகிற நிலையில் சமீபத்தில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் கப்பு முக்கியம்! நாட்டில் எந்த மூலையில் நல்ல நடந்தாலும் அது நம்ம பசங்க தான் செஞ்சிருக்கணும் இந்த ஆசை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன் என்ற வார்த்தைகளை அள்ளித் தூவி தனது இயக்க நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்வுக்கு அடுத்து சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்பது இதுவரை மக்கள் காணாத பெரும் மழை வெள்ள பாதிப்புகளை சந்தித்தனர். அத்தியாவசிய பொருள்களும் கிடைக்காமல் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வராமல் சென்னை மக்கள் உதவிக்கு யாருமில்லாமல் நிற்கதியாக மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது களத்தில் இருந்து உதவிகளை ஆற்றுங்கள் என்று விஜய் உத்தரவிட்டதை அடுத்து அவரது மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்றது. இருப்பினும் இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் பொழுது விஜயின் புகைப்படத்தை அருகில் வைத்துக்கொண்டே விஜய் மக்கள் இயக்கம் வழங்கியது பெரும் விமர்சனத்தை பெற்றது. இதனால் பல விமர்சன கருத்துகளை சந்தித்த விஜய் அவரது இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அழைத்து கண்டித்ததாகவும் கூறப்பட்டது. இப்படி அரசியல் பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் விஜய் தனது திரையுலகில் இன்னும் நடிப்பை தொடர்ந்து தான் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது இருப்பினும் இதற்கு முன்பாக இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படம் பெரும் தோல்வியை சந்தித்தது இப்படத்தால் எங்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை என திரை அரங்கு உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துக்களும் செய்திகளில் வெளியாகியிருந்தது.
இருப்பினும் விஜய்க்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் என்பது 100 கோடி! அதுமட்டுமின்றி விஜய் படம் என்றாலே கலெக்ஷன் அள்ளும், வசூல் சக்கரவர்த்தி என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படங்களே வசூலில் அதிகம் அடிவாங்கி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் விஜய் குறித்து விஜய் உடன் நடித்த மலையாள நடிகர் ஒருவர் கூறிய கருத்து வைரலாக பரவி வருகிறது. அதாவது விஜய் உடன் பீஸ்ட் படத்திலிருந்து நடித்த ஷின் டாம் சாக்கோ என்ற மலையாள நடிகர் தனியார் youtube சேனல் ஒன்று அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு விஜய் என்ன மம்முட்டி - மோகன்லாலை விட பெரிய நடிகரா? அவருக்கு ஏன் அவ்வளவு சம்பளம் வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை என்ற பதிலை அவர் அளித்துள்ளார், இந்த பேட்டி தற்போதைய இணையங்களில் வைரலாக பரவுகிறது இதன் மூலம் அவ்வளவு தான் விஜய்க்கு கேரள மாநிலத்தில் விஜய்க்கு இருந்த மரியாதை குறைந்து விட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.