தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் இடம் பிடித்து இருந்த நடிகர் விஜயகாந்த். நல்ல முறையில் ஆரோக்கியமாக இருந்த காலங்களில் பல உதவிகளை மக்களுக்கு செய்தவர்., உதவி கேட்பவர்கள் அனைவருக்கும் தன்னால் முடிந்ததை வழங்கி உணவளித்து திரை உலகில் தான் சம்பாதித்ததை மக்களுக்காகவே செலவழித்து வந்தார் நடிகர் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் மக்களுக்காக திரையுலகையும் தாண்டி நிஜத்திலும் மக்களுக்காக வாழ வேண்டும் என்று யோசித்த நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களின் செல்வாக்கையும் பெற்றார். இதனால் கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அளவிற்கு உயர்ந்தார். ஏனென்றால் அந்த அளவிற்கான மாஸ் வசனங்கள் மற்றும் சரியான புள்ளி விவரங்கள் அதிரடி ஆக்சன் மற்றும் நாட்டிற்கு நல்லது செய்யும் பல கதைகளைக் கொண்ட படங்களில் இவர் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தார். இருப்பினும் இவர் அரசியலில் இறங்கிய சில காலங்களிலேயே அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெளிநாடுகளுக்கு சென்றும் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது பிறகு வீட்டில் இருந்தபடியும் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் ஒரு நேரம் போல் ஒரு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இருப்பினும் அதற்குப் பிறகு விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் விஜயகாந்த்தை வைத்து நடைபெற்றது அந்த கூட்டத்தில் தேமுதிகவின் பொது செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் திடமாக அமர முடியாமல் தேமுதிக நிர்வாகிகளால் பிடித்த அமர வைக்கப்பட்ட காட்சிகள் இணையங்களில் வைரலானதால் பல விமர்சனங்களுக்கு உள்ளானது, முடியாதவரை வைத்து இப்படி செய்கிறீர்களே அவரை விடுங்கள்! ஓய்வெடுக்க செய்யுங்கள் என்று பலர் விஜயகாந்தை பரிதாபமாக பதிவிட்ட விமர்சன பதிவுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதிலும் குறிப்பாக இயக்குனர் பாண்டிராஜ், கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் தயவுசெய்து... பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை 'இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனை அடுத்து தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், கேப்டனின் முதுகில் பலர் குத்தி விட்டு போனது தான் அவரின் முதல் சரிவு அதற்குப் பிறகு அவர் குறித்து வெளியான வீடியோகளில் பெரும்பாலானவை போலியானது பொய்யான தகவல்களையும் சில யூ டியூப் சேனல்கள் வெளியிடுகிறார்கள், அவர் பொதுக்குழு மற்றும் கட்சிக்கெல்லாம் வரமாட்டார் என்று கூறினார்கள் கட்சியின் வேட்டி கட்டி வந்த அமர்ந்தார்! மிஸ்டர் பாண்டியராஜிடம் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன் ஏதோ ஒரு பதிவு போட வேண்டும் என்பதற்காக பதிவிடாதீர்கள் இது சினிமா கிடையாது கட்சி எங்களுக்கு தெரியும் அவரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்க அறிவுரைக்கும் இலவச அட்வைஸுக்கும் நன்றி என்று இயக்குனர் பாண்டிராஜ்ஜின் பதிவிற்கு பதிலடி கொடுத்தார். விஜயகாந்த் முடியாமல் இருக்கும் பொழுது அவரால் வாழ்ந்த தமிழ் திரை உலகத்திலிருந்து ஒருவரும் எட்டி பார்க்கவில்லை இப்பொழுது என்ன கரிசனம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தைரியமாக கூறியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.