கலைத்தாயின் மகன் என்றும் திரை உலகில் புகழின் உச்சிக்கே சென்ற கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்தார். கமலஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து வந்த தேர்தலிலும் வேட்பாளர்களை நிற்க வைத்து தோல்வியை சந்தித்தார். இருப்பினும் அரசியலில் இதுவரை இருந்து வருகிறார். இதற்கிடையில் அவர் தனது திரையுலக நடிப்பை விடவில்லை! அதுமட்டுமின்றி இதுவரை மேலை நாடுகளில் மட்டும் ஒளிபரப்பாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழகத்தில் முதல்முறையாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்த முடிவு செய்ததை அடுத்து அதற்கு தொகுப்பாளராக நடிகர் கமலஹாசனை அழைத்தது. அவரும் அந்த நிகழ்ச்சியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்நாள் வரை அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி! கிட்டத்தட்ட ஏழு சீசன்களை எட்டி உள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏழு சீசனிலும் தொகுப்பாளராக நடிகர் கமலஹாசன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை பார்ப்பதற்காகவே அதிகம் பேர் வந்ததாகவும் பார்வையாளர்களின் விகிதமும் கூடியதாகவும் கூறப்பட்டு வந்தது, மேலும் இந்த நிகழ்ச்சியின் மேடையை கமலஹாசன் தனது பிரச்சார மேடையாக சில நேரங்களில் மாற்றி மக்களுக்கு தான் கூற வேண்டிய கருத்துக்களை தெரிவித்தும் வருவார். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் சீசன் 7 லில் கமலஹாசனின் தீர்ப்பும் கருத்துக்களும் மக்கள் கருத்துக்களுடன் உடன்படவில்லை என்றும் நிகழ்ச்சியில் உள்ள ஹவுஸ் மேட்டிற்கு எந்த ஒரு வாய்ப்பும் வழங்காமலும் சில தவறுகளை கமலஹாசன் கேட்காமலும் வருவதாக மக்கள் மத்தியில் சில கருத்துக்கள் நிலவியது. இதனால் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தற்பொழுது பார்வையாளர்களை இழந்து வருவதால் என்ன செய்வது என்று யோசித்த அந்த தொலைக்காட்சி நிறுவனம் நடிகர் கமலஹாசனை தொகுப்பாளரிலிருந்து தூக்கிவிட்டு வேறு யாரையாவது தொகுப்பாளராக நியமிக்கலாமா என்று யோசனையில் இருந்து வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதுமட்டுமின்றி உலகநாயகன் கமலஹாசன் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த மழை வெள்ளத்தை குறித்தும் 2023 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த மழை வெள்ளத்தை குறித்தும் பதிவிட்ட பதிவுகள் எதிர்மறையாக உள்ளது என்றும் 2015 வெள்ள பாதிப்பிற்கு அரசுதான் காரணம் என்று கூறிய கமலஹாசன் 2023ல் பெய்த மழைக்கு கால நிலைகளை காரணம் என்று கூறியுள்ளார் ஒருவேளை அவர் மொத்தமாக விழுந்து விட்டாரோ என்பது போன்ற பல விமர்சனங்கள் நடிகர் கமலஹாசனின் பதிவுக்கு எழுந்தது. அதாவது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற கருத்துக்களை அவர் தெரிவித்து வருகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசனை தூக்கி விடலாம் என்று தொலைக்காட்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது, இதனை அறிந்த கமலஹாசன் அடுத்து 2024 ஆம் ஆண்டு தேர்தல் வர இருக்கிறது அதனால் என்ன செய்வதென்று தெரியாமல், மக்கள் மத்தியில் முகத்தை காட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக கமலஹாசன் செய்த ஒரு செயல் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது பிரபல பத்திரிகை நிறுவனம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து கசிந்த என்னை கழிவுகள் குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தது அதனை பார்த்து நடிகர் கமலஹாசன் கொசஸ்தலை ஆற்றை ஆய்வு செய்ய சென்றுள்ளார். இதன் பின்னணியில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து எப்படியாவது ஒரு எம்பி ஐ பெற்றுவிட வேண்டும் என கமல் முனைப்புடன் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.