24 special

மோடிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்..!

Vishal, Modi
Vishal, Modi

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்நிலையில் தமிழ் நடிகர் பிரதமர் மோடியை புகழ்ந்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான புரட்சி தளபதி விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பாக நடிகர் அர்ஜுன் உடன்  உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். லிங்கு சாமி இயக்கத்தில் சண்டைக்கோழி படம் மூலம் பிரபலமானவர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் இந்த ஆண்டில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், நடிகர் விஷால், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம். ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வர்றது குடும்பத்துடன் பங்கேற்றார். மேலும் தனுஷ், அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி மட்டும் மலையாள நடிகர் பலரும் கலந்துகொண்டனர். நேரில் பங்கேற்கமுடியாமல் உள்ள நடிகர்கள் இணையத்தில் பாரத பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்கு இன்றையிலிருந்து கோவில் அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.