கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே உள்ள மைலோடு மடத்துவிளை கிராமத்தைச் சேர்ந்த ராயப்பனின் மகனான சேவியர் குமார் அரசு போக்குவரத்து கழக கன்னியாகுமரி பனிமலையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருபவர். இவரது மனைவி ஜெமினி அதே பகுதியைச் சேர்ந்த முக்கிய அதிதூதர் ஆலயத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் சேவியர் குமார் நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் சேவியர் குமார் ஆலயம் மற்றும் பள்ளியின் கணக்கு வழக்குகளில் முறைகேடுகள் இருப்பதாகவும் சில குளறுபடிகள் நடப்பதாகவும் அவ்வப்போது ஆலய நிர்வாகிகளிடம் கேட்பதையும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவரையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இதில் மிக அதிகமாக பாதிக்கப்படுவது மையிலோடு ஆலய பங்குதந்தையாக இருந்த நாகர்கோவில் ராம் புது பகுதி சேர்ந்த ராபின்சன்! இதனால் இவர் ஆலயத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் பணிபுரியும் சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு மெமோ கொடுத்துள்ளார். அந்த மெமோவை ஜெமினி வாங்க மறுத்ததால் அவரை இடைநீக்கம் செய்துள்ளது பள்ளி நிர்வாகம். இதனை அடுத்து ஜெமினி மற்றும் அவரது உறவினர்களில் சிலர் மயிலாடு ஆலயத்தின் பங்கு தந்தையாக உள்ள ராபின்சனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அந்த பேச்சுவார்த்தையில் தனது கணவர் இனி சமூக வலைதளங்களில் ஆலயம் மற்றும் பள்ளி வளாக கணக்கு குறித்த எந்த ஒரு பதிவுகளையும் இட மாட்டார் தன்னை மன்னித்து ஆசிரியர் வேலை வழங்கும்படியும் ஜெமினி கூறியதற்கு ராபின்சன் சேவியர் குமார் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதத்தை கொடுத்தால் மட்டுமே வேலை தர முடியும் என்று கூறியுள்ளார். இதனால் சீவியர் குமார் மன்னிப்பு கடிதத்துடன் மயிலோடு ஆலய வளாகத்தில் உள்ள அருட்பணியாளர் இல்லத்திற்கு சென்று ராபின்சனிடம் கடிதத்தை கொடுத்து வரலாம் என்று நினைத்துச் சென்ற பொழுது ராபின்சன் சேவியர் குமாரை இஸ்திரி பெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதற்கிடையில் சேவியர் குமார் ஆலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் இறந்து கிடைப்பதாக அவரது மனைவி ஜெமினிக்கும் தகவல் கிடைத்ததை அடுத்து உறவினர்களுடன் ஜெமினி அங்கு சென்று பார்க்கும் பொழுது ரத்த வெள்ளத்தில் தனது கணவர் இறந்து கிடந்ததை கண்டு கதறி எழுதி இருக்கிறார் ஜெமினி! அதுமட்டுமின்றி இந்த தகவல் சுற்றுவட்டாரம் முழுவதும் பரவ ஏராளமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தகவலை அறிந்த குளச்சல் டிவிசன் ஏ எஸ் பி பிரவீன் கௌதம், தக்கலை டிஎஸ்பி உதயசூரியன, தக்கலை ராமச்சந்திரன், இரணியல் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் சேவியர் குமார் தலையில் இஸ்திரி பெட்டியால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது அடுத்து மயிலோடு பங்கு தந்தையான ராபின்சன் தலைமறைவாகியுள்ளார்.
அதோடு சேவியர் குமாரின் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் முயற்சித்த பொழுது சேவியர் குமாரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை செய்தவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை எடுக்க விடுவோம் என்று கூறி ஆலய வளாகத்திலேயே கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொலை செய்து தலைமறைவாகியுள்ள ராபின்சன் திமுகவைச் சேர்ந்தவர் என்ற தகவலும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக கடும் பின்னடைவு மற்றும் அதிருப்திகளை சந்தித்து வரும் நிலையில் திமுகவின் நிர்வாகி ஒருவர் இதுபோன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது மேலும் கொடைச்சலை ஏற்படுத்தும் என தெரிகிறது.