திமுக ஆட்சிக்கு முன்பு தமிழகத்தில் இருந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 2021 திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறியவர் குறுகிய காலத்திலேயே இரு பெரும் துறைகளில் அமைச்சராக திமுக அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி கரூர் மற்றும் கோவை பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு திடீர் ஆப்பாக அமலாக்க துறையின் சோதனை நடைபெற்றது. அதில் பல முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விசாரணைக்காக செந்தில் பாலாஜி அழைத்துச் சென்றாரே தவிர இன்னும் சிறையிலே அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சிறையில் இருந்து வெளி வர செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுக்கள் தாக்க செய்யப்பட்டது இருப்பினும் அவரது ஜாமின் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருவது செந்தில் பாலாஜி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து செந்தில் பாலாஜி வழக்கில் அதிக கவனம் செலுத்தி வந்த திமுக தற்பொழுது அதனை சற்றும் கவனிக்காமல் தன் தேர்தல் வேலைகளை மட்டுமே கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படியாக கடந்த கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின் இளைஞர் அணியின் இரண்டாவது மாநாட்டை கடந்த ஜனவரி 21 ஆம் தேதி அன்று சேலத்தில் திமுக ஏற்பாடு செய்தது இதற்கு முழுவதுமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக கடந்த 2007 இல் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் திமுக இளைஞரணியில் இருந்த பொழுது இளைஞரணி மாநாட்டை மூத்த நிர்வாகிகள் முன் நின்று நடத்தியது போன்று தற்பொழுதும் அமைச்சர் உதயநிதி சில மூத்த அமைச்சர்களை முன்னிறுத்தி நடத்தினார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திமுகவின் பல தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர் என்றாலும் மாநாட்டில் போதிய அளவிலான வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் இல்லை என்பது தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டாக அமைந்துள்ளது ஏனென்றால் வாகனத்தை கிட்டத்தட்ட 26 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு ஒரு பாத யாத்திரை போன்று மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நடை பயணத்தை மேற்கொண்டோம் என்று திமுகவைச் சேர்ந்த ஒரு தொண்டரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பது மாநாட்டின் போக்கை காட்டுகிறது.
அதுமட்டுமின்றி மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளும் சரிவர இல்லை என்றும் பலர் அதனை தரையில் கொட்டி சென்ற வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியானதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் பரபரப்பான தகவல் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது திமுக இளைஞரணி மாநாட்டை சேலத்தை நடத்துவதற்கு முன்பாக மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தூத்துக்குடி எம்பி அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து சேலம் மாநாட்டிற்கு பிறகு எனது மாவட்டத்தில் மாபெரும் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறேன் அதில் கண்டிப்பாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டும், அதோடு அமலாக்க துறையின் வழக்கு வேறு என் கழுத்தை நெருக்கிறது வேறு கட்சியிலிருந்து வந்தவர் என்பதற்காக அந்த அமைச்சரை போன்று என்னையும் கைவிட்டு விடாதீர்கள் என உதயநிதி ஸ்டாலினிடம் அனிதா ராதாகிருஷ்ணன் கண்கலங்கி கோரிக்கையை முன்வைத்துள்ளாராம்! அவை அனைத்தையும் கேட்டுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அது மட்டுமல்லாமல் கனிமொழியின் ஆதரவாளர் ஒருவர் உதயநிதியிடம் சரணடைந்தித்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது..