நெல்லை மாவட்டம் பனங்குடியைச் சேர்ந்த நவமணி வேதமாணிக்கம் என்பவர் கடந்த 1997-ம் ஆண்டு சொந்தமாக அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பணியாளர் கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குவதற்கான டெண்டருக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அப்போது கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ கட்சி வளர்ச்சி நிதிக்காக பணம் கேட்டதற்கு கொடுக்காததால், டெண்டரை வேறொரு நபருக்கு கொடுத்த நிலையில் தன் நிறுவனம் நஷ்டம் ஏற்பட்டு தற்போது சென்னையில் கால் டாக்சி ஓட்டிவருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த செல்லுர் ராஜு மீது ஊழல் புகார் எழுந்தது. இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் விதமாக செயல்பட்ட அந்த நபர் மீதும், செய்திகளை வெளியிட்ட 7 ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, தன் பெயர்க்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளிலும், ஊடகங்களிலும் ஒரு நிகழ்வு வெளியானது. கணினி டெண்டர் ஆனது 2 நிபுணர்கள் குழு இருக்கும் அவர்கள் தான் முடிவு எடுப்பார்கள். அமைச்சர்கள் சொல்லவதை அவர்கள் கேட்க மாட்டார்கள். நான் கணினியின் நிபுணர் அல்ல என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
சம்பந்தமே இல்லாமல் வேண்டும் என்றே குறை சொல்லவே பேட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கணினி மென்பொருளை வேறொரு நபருக்கு கொடுத்ததாக தான் குற்றம் சொல்கிறார். அது முழுக்க முழுக்க தவறு. தமிழ்நாடு கூட்டுறவு மாநில வங்கி மூலம் அணைத்து மாவட்டத்திலும் உள்ள கூட்டுறவு வங்கியில் கணினி மையமாக்கப்பட்ட நிலையில் யாரும் குறை சொல்ல வில்லை. மாநில தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இருக்கிறது அனைத்து சங்கத்திலும் கணினி மையமாக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு எங்கள் அரசை பாராட்டி விருது கொடுத்தது. இது தான் நடந்தது இதில் குற்றம் ஏதும் நடக்க வழிஏதும் இல்லை. அதில் நான் பலி ஆடாக மாற்றிவிட பார்க்கின்றனர். தேவையில்லாமல் இந்து போன்ற செய்திகளை வெளியிட்டு என்னுடைய பொது வாழ்வில் களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் வருகின்றது, அடுத்தாக சட்டமன்ற தேர்தல் வருகிற பொழுதில் இது போன்ற குற்றசாட்டு வைக்கின்றனர். இந்நிலையில் ஏதோ ஒரு பின்புலம் இருக்கிறது என்பது தெரிகிறது. 8 வருடம் களைத்து இது போல செய்திகள் வெளிவருவது களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் ஆக தான் இருக்கக்கூடும். மேலும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கூறி புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார். திமுக அமைச்சர்கள் ஊழலில் சிக்கி வரும்போது தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.