Cinema

சமூக ஆர்வலர் சூர்யா, விஜய் எங்கே சென்றார்கள்....அரசியல் தலைவர் காட்டம்!

kongu eswaren, actor vijay, actor ranjini
kongu eswaren, actor vijay, actor ranjini

தமிழகத்திற்கு தேவையான நீரை கொடுக்காமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டித்து சினிமா துறை போராட்ட வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.சமூகத்தில் எந்த பிரச்னை எழுந்தாலும் முதலில் குரல் எழுப்புவது நடிகர்கள் அதன் பின் அரசியில் கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவிப்பார். அந்த வகையில் தமிழ்நாட்டில் எதாவது பிரச்னை எழுந்தாலும், நடிகர் சூர்யா தனது கண்டனத்தை தெரிவித்து, வீடியோவாக வெளியிடுவார். அதேபோல் நடிகர் சத்யராஜ், கமல் ஹாசன் ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துவருவார். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் பெரும் பிரச்சனையாக வலுத்து வருவது கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.


இதனை கண்டித்து விவாசயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து எந்த ஒரு முன்னணி நடிகர்களும் குரல் கொடுவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன்  தெரிவித்தது: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து சினிமா துறையினர் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும்,  உரிய தண்ணீர் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பயிர்களும் கருகி அழிந்து கொண்டிருக்கின்றன. எவ்வளவு தண்ணீர் கர்நாடகாவில் இருந்தாலும் விகிதாச்சாரப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால் கர்நாடகா பல்வேறு காரணங்களைச் சொல்லி தவிர்த்தே வந்திருக்கிறது. 

கர்நாடகாவில் பந்த் நடைபெற்ற பொழுது அங்குள்ள சினிமா நட்சத்திரங்கள் அந்த மாநிலத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ஆனால் இங்கு இருக்கும் முன்னணி நடிகரக்ள் சூர்யா, விஜய், ரஜினிகாந்த் போன்றோர்கள் அவர்களின் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். முன்னதாக அனைத்து பிரச்சனைக்கும் குரல் எழுப்பும் சூர்யா இப்பொழுது எந்தவித கருத்தையம் தெரிவிக்காமல் இருப்பது கண்டிக்க தக்கது என்று விமர்சித்துள்ளார். தமிழ் நடிகர் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் அவமதிக்கபட்டத்துக்கும் இங்கு இருக்க கூடிய நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நம்முடைய காவிரி தண்ணீர் பிரச்சனையை கர்நாடக அரசும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என்று சினிமாத்துறையை சேர்ந்த நடிகர்கள் போராட்டம் நடத்தினார்கள். திரைப்பட இயக்குனர்களும் மற்றும் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களும் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் இப்போது சினிமாத்துறையை சார்ந்த யாரும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டுமென்று கோரிக்கை கூட வைக்கவில்லை. தாங்கள் நடிக்கின்ற படங்கள் கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு வரும் என்பதற்காகவோ அல்லது மத்திய அரசிடம் பயந்து இப்படி இருக்கின்றார்களா என தெரியவில்லை. 

தமிழகத்தினுடைய சிஸ்டத்தை மாற்றி தமிழ்நாட்டை காப்பேன் என்று அரசியலுக்கு வர துடித்து, பிறகு கைவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து ஒரு குரல் கூட எழுப்பாமல் உள்ளார். வருகின்ற தேர்தல் அல்லது அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பேன் என்று மும்முரமாக தன் ரசிகர்களை உசுப்பேத்திக் கொண்டுள்ள நடிகர் விஜய் தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் உள்ளார். சினிமா நடிகர்கள் தங்கள் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறார்களே தவிர, தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமைகளுக்காக ஒரு சிறிய போராட்டம் கூட நடத்த தயங்குகின்றனர். 

தமிழகத்தின் டெல்டா மாவட்ட பயிர்களை காப்பாற்றவும், 1,500 அடி ஆழத்திற்கு கீழே சென்று கொண்டிருக்கின்ற கொங்கு மண்டல நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், தமிழக மக்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் சினிமாத்துறையினர் ஒன்று சேர்ந்து கர்நாடகா அரசுக்கு கோரிக்கை வைத்து போராட முன்வர வேண்டும் என ஈஸ்வரன் தெரிவித்தார்.முன்னதாக, திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட திரை விமர்சகர்கள் காவிரி விவகாரத்தில் நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விமர்சித்து வந்த  நிலையில் தற்போது கொங்கு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் சூர்யா சமூகத்திற்கு தொடர்பான படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூகத்திற்கு குரல் கொடுப்பார். ஆனால் இதுநாள் வரை விவசாயத்திற்கு போதிய நீரை தராமல் இருக்கும் கதிர்நாடகாவை கண்டித்து குரல் எழுப்பாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.