தமிழில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விக்ரம்பிரபு இவர் நடிப்பில், கடந்த 6ம் தேதி திரைக்கு வந்த படம் இறுகப்பற்று இந்த படத்தை இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விதார்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் விமர்சனம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் இணைந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் இயக்குனர் யுவராஜ் தயாளன் கலந்து கொண்டு பேசியது; இந்த படத்தை பார்த்து வெற்றி பெற செய்த அன்பார்ந்த ரசிகர்களுக்கு எனது நன்றி.ஷ்ரத்தாவின் கதாபாத்திரத்திற்கு அவரை கடைசி சாய்ஸ் ஆகத்தான் நினைத்து வைத்திருந்தேன். காரணம் இதே கதாபாத்திரத்தை கஷ்டப்பட்டு நடிக்கும் ஒரு நடிகையை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஆனால் சூப்பர் என சொல்லும் அளவிற்கு ஸ்ராத்தாவிற்கு இந்த கதாபாத்திரம் அமைந்துவிட்டது படத்தின் மொத்த வசனங்களில் ஷ்ரத்தாக்கு இந்த படத்தில் 38 சதவீத வசனங்கள் இருந்தன. டப்பிங் குரல் கொடுத்த ஸ்மிருதிக்கும் எனது நன்றி. ராஜகிருஷண சாருக்கு நன்றி நீங்கள் சொன்னிங்க அப்போவே எழுதி வச்சிக்கோ நாளை உன்னைப்பத்தி தான் பேசுவார்கள் என்று சொன்னார் அதுபோலவே இன்று நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் போது நடிகை அபர்ணதி என்னை டார்ச்சர் பண்ணிய நடிகை என்றால் அது அவர் தான். இப்போது என்னை எவ்வளவு புகழ்ந்து பேசுகிறார். அவர் காலில் மட்டும் தான் விழவில்லை. அந்த அளவுக்கு கெஞ்சினேன். அவர் வந்தபின் நடிப்பில் கவனம் செலுத்தியது மற்றும் டெடிகேஷனாக நடித்தார். ஆனால் சானியா ஐயப்பனை பொறுத்தவரை என்ன காட்சி எடுக்கிறோமோ அதே மூடில் இருப்பார் அவர் அழும்போது நானும் அழுவேன். விதார்த் நானும் 13 வருடம் முன்பே ஒரு படம் பண்ண வேண்டியது அவர் மைனா படம் நடித்திருந்தார். அப்போது எனக்கு வேறு படம் இருந்ததால் ஒரு ப்ராஜெக்ட் பண்ண முடியவில்லை.
ஸ்ரீ என்னிடம் உதவி இயக்குனராக வேலை பார்க்கத்தான் வந்தார். அதன்பிறகே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தில் நடிக்கும் போதே நான் எவ்வளவு கெட்டவனாக இருந்திருக்கிறேன் என பெர்சனல் ஆகவே ஃபீல் பண்ணி பேசுவார். இப்படம் பார்த்துவிட்டு அவரை வைத்து ரொமான்ஸ், லவ் படம் எடுக்கலாம் என யாரும் நினைக்காதீர்கள். லவ் சீனை பொறுத்தவரை அவருக்கு நடிக்கவே தெரியாது. யாராவது அவரை வைத்து லவ் படம் எடுக்கதா இருந்தால் என்னிடம் கேட்டு விட்டு படம் பண்ணுங்கள். அந்த அளவிற்கு என்னை வேலை வாங்கி இருக்கிறார் ஶ்ரீ.
விக்ரம் பிரபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள். காரணம் இது மல்டி ஸ்டார் படமாக இருந்தது. அது மட்டுமல்ல ஹீரோயினை மையப்படுத்திய படமாகவும் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று கூறி ஒப்புக்கொண்டார். அவரும் ஷ்ரத்தாவும் நடிக்க வேண்டிய ஏழு நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினோம். என்னுடைய தந்தை தீவிரமான சிவாஜி ரசிகர். என் அப்பா சிவாஜியின் படத்தை காட்டி இவர் தான் உங்க தாத்தா என்று கூறுவார். நானும் அதனை நம்பினேன் அதன் பிறகு தான் தெரியவந்தது.
அப்போது நான் அழுதுவிட்டேன் சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது. சிவாஜி இறந்த அன்று இரவு என் தந்தை ரொம்பவே அழுதார் என தெரிவித்தார். நான் சில பேர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைப்பவர்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு சாரும் ஒருவர் என கூறினார். மேலும் இந்த இறுகப்பற்று படத்தை பார்த்து விட்டு நலப்படியான கருத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.