24 special

மது குடித்து இறந்தால் அதிக அளவு இழப்பீடு!....நாட்டை பாதுகாப்பவர் இறந்தால் ஒன்றும் இல்லை- சீமான்!

mk stalin, seeman
mk stalin, seeman

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது, அதற்கான வேலைகளை அனைத்து கட்சியும் கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட வாரியாக சென்று பொதுக்கூட்டத்தை கூட்டி மக்களிடம் பேசி வருகிறார்.இந்நிலையில் தர்மபுரியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய சீமான்: "மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சியின்மீது பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உள்ளது. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலை முன்னெடுத்து பேசுவது நாங்கள் தான். இளைய தலைமுறை பிள்ளைகளிடம் நாங்கள் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளோம்.


5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் தான் வருகிறது. ஆனால், மாறுதலும் ஆறுதலும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் என்றார் குன்றக்குடி அடிகளார். இலவசங்கள், சலுகைகள் எதையும் தர வேண்டாம். எங்களுக்கான உரிமைகளை தாருங்கள் என்கிறோம் நாங்கள். கல்வியை தரமாக கொடுத்தால், பேருந்து பயணத்துக்கு பெற்றோரே பணம் செலுத்திக் கொள்வார்கள். நிரந்தர வருவாய் அளிக்கும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்துங்கள்.மற்ற மாநிலத்தில் கல் மாவு மூலம் கோலம் போட்டுக் கொண்டிருந்த காலத்தில், எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு இரையாகட்டும் என்று அரிசி மாவில் கோலம் போட்ட பெருமைமிக்க தமிழ் இன மக்களை, கடந்த 60 ஆண்டு கால ஆட்சி இலவச அரிசிக்கு கையேந்த வைத்துள்ளது.

விளையாட்டில் மதம், கடவுள் சார்ந்த கோஷங்கள் மூலம் நம்மை கற்காலத்தை நோக்கி தள்ளிச் செல்கின்றனர். அடுத்த தலைமுறை பிள்ளைகள் சாதி, மதம், கவர்ச்சி ஆகியவை அண்ட முடியாத பெரும் நெருப்பாக வர வேண்டும்.தமிழ்நாட்டில் சாராயம் குடித்து இறந்தால் அதிக அளவில் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குகிறது இந்த தமிழக அரசு,  அதுவே நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரன் இறந்தால் சொற்ப இழப்பீடு இது தான் தமிழக அரசின் சாதனை என்று காட்டமாக பேசினார். திரைப்படங்களை எதிர்க்கும்போதுதான் பளீர் வெளிச்சம் விழுகிறது. விஜய் நடித்த படத்துக்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பைப் பார்த்தால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவா அல்லது வாட்டாள் நாகராஜா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் கேஜிஎப் படம் வெளியானபோது எங்களால் தடுத்திருக்க முடியாதா?. ஆன்மிக பேரறிஞரான பங்காரு அடிகளார் தமிழர்களின் மெய்யியல் மரபில் செய்தது அனைத்தும் புரட்சி. அவரது கல்விச் சேவைகளும் முக்கியமானவை.நாட்டின் சுதந்திரத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பாடுபட்ட நம் முன்னோர்களின் அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. இங்கிருப்பவை அனைத்தும் திராவிட அடையாளங்கள் மட்டும் தான். உண்மை வரலாறு எழுச்சியை ஏற்படுத்தும் என்பதற்காகவே இவ்வாறு மறைக்கப்பட்டுள்ளன.நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக. இவ்வாறு முந்தைய ஆட்சியில் பெற்றெடுத்த குழந்தைகளை, பெரும்பான்மையுடன் இன்று ஆட்சியில் உள்ளவர்கள் வளர்த்தெடுக்கின்றனர். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடப்போறம். .நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டியில்லை, எங்களுக்கு நாங்கள் தான் போட்டி." என்று கூறினார்.