தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடிக்கம்பத்தை போலீசார் இன்று நள்ளிரவு அகற்றினர். அதனை அகற்றும்போது போலீசாருக்கும் , பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு முன்புறம், சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையில் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் 200க்கும் பேற்பட்டோர் வந்து பாஜக நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தை சுமுக உடன்பாடு எட்டப்படாத நிலையில், போலீசார் ஜேசிபி கொண்டு வந்து அப்புற படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பாஜகவினரை கைது செய்தனர். அதன் பின் கொடிக்கம்பத்தை போலீசார் அப்புறப்படுத்தினர்.இந்த கைகலப்பில் பாஜக நிர்வாகிக்கு மண்டை உடைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இச்சம்பவம் பாஜக நிர்வாகியிடையே கடும் கோபத்தை உண்டாகியுள்ளது.
இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற தீவிரவாதிகளை கைது செய்யப்படுவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது. திமுக அரசின் உத்தரவின் பேரில் நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த போலீசாரை எதிர்த்து போராடிய சகோதர, சகோதரிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்கு தலை நடத்தி இருக்கிறார்கள்.எங்கள் கட்சி தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் திமுக விலை கொடுக்க நேரிடும், தமிழக பா.ஜ.க.வின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்து கொள்ள வேண்டாம். நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
10 ஆயிரமாவது கொடிக் கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி (100-வது நாள்) காவல் துறையினரின் தடியடியால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட அதே இடத்தில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். என்று தெளிவுபடுத்தியுள்ளார் அண்ணாமலை. இதற்கு அரசியல் விமர்சகர்கள் திமுக அரசு சும்மா இருக்காமல் பாஜக ஒரு இடத்தில் மட்டும் கொடி ஏற்றி அவர்களது பணியை செய்து இருப்பார்கள்.
இப்போது பாஜகவின் கொடி கம்பத்தை சீண்டியதால் தினமும் 100 கொடி கம்பத்தை நடப்போவதாக அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.இது கவுண்டமணி நகைச்சுவை பாணியில் சும்மா இருந்த என்ன சொறிஞ்சி விடுவது போல் உள்ளது என்றும் திமுக அமைச்சர்கள் தொடர்நது ஊழலில் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலை இத்தகைய அறிவிப்பு பாஜக நிர்வாகிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தினமும் கொடி கம்பத்தை நடுவது குறித்து திருட்டு திமுகவிற்கு சரியான பதிலடி தலைவரே என்று சமூக தளத்தில் கொண்டாட துவங்கியுள்ளனர்.