24 special

கோவையில் தர்ணாவை கையில் எடுத்த ஊழியர்கள்... 2வது நாளாக தொடர்கிறது!

mk stalin
mk stalin

தமிழகத்தில் திமுக ஆட்சிவருவதற்கு முன் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு அதனை எதையும் கண்டுகொள்ளவில்லை. அதனை தற்போது இருக்கும் எதிர்க்கட்சிகளும், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில் சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்று வகையான ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியாக போராடிய ஆசிரியர்களை காவல்துறையை ஏவிவிட்டு கைது செய்தனர்.


ஆசிரியர்களை தொடர்ந்து மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள் தங்களது பணி நிரந்தரம் செய்து கொடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களும் திமுக அரசு காவல் துறையை கொண்டு கைது செய்தது.இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தாலே அனைத்து ஊழியர்களும் போராட்டம் நடத்தியே தங்களது தேவைக்கான உரிமையை பெற்று கொள்ள முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவையில் மாநகராட்சியில்  உள்ள தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் 2500க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் தங்களை பனி நிரந்தரம் செய்ய கோரியும், கலெக்டர் அறிவித்த ரூ.721 சம்பள உயர்வை வழங்க கோரியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முதலே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அடுத்து, அவர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து இன்று 2-வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கர் கூறியது: பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை நிரந்தர தூய்மை பணியாளர்களாக மாற்ற கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சம்பள உயர்வு கேட்டோம். கலெக்டர் ரூ.721 சம்பளம் நிர்ணயித்தார். அதை கூட இது வரை எங்களுக்கு வழங்க வில்லை.நேற்று அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கோவை மாநகராட்சியில் குப்பை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிரந்தர பணியாளர்களை கொண்டு மாநகராட்சியில் குப்பைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இப்படி திமுக அரசு தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு உடனடியாக தலையிட்டு அவரகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.